Ticker

6/recent/ticker-posts

வீட்டில் முட்டை இருக்கா? அப்போ சுவையான ஆந்திரா ஸ்டைல் முட்டை குழம்பு செய்ங்க


எவ்வளவு உணவுகள் வீட்டில் செய்து சா்பிட்டாலும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக சமைப்பார்கள். நாம் அதை ருசித்து பார்க்க நினைத்திருப்போம் ஆனால் அதற்கான ரெிபி தெரிந்திருக்காது.

ஆந்திராவில் சமைக்கப்படும் உணவுகள் அனைத்துமே சுவை பிரமாதமாக இருக்கும். அவர்கள் செய்தில் முட்டை குழம்பு திகவும் சுவையாக இருக்கும்.நாம் சமைப்பது போல் இவர்கள் மசாலா பொடி போட்டு சமைக்காமல் வேறு விதத்தில் சமைப்பார்கள். அந்த சுவை ரெசிபி என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
முட்டைகள்
புளி
வெந்தய இலை
வெங்காயம்
தக்காளி
கொத்தமல்லி
பச்சை மிளகாய்
கடுகு
நல்லெண்ணெய்
கறிவேப்பிலை
மஞ்சள் தூள்
இஞ்சி
பூண்டு பேஸ்ட்
தண்ணீர்
உப்பு
செய்யும் முறை
முட்டைகளை வேகவைத்து தோல் நீக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் புளியை தண்ணிரில் கரைத்து வைக்க வேண்டும். பின்னர் ஒரு பேனில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு முட்டைகளை வறுக்கவும்.

இமன் பின்னர் ஒரு பாத்திரத்தில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடுகு போட்டு பொரிந்ததும் மூன்று பெரிய சைஸ் வெங்காயத்தை பொடிதாக நறுக்கி போட்டு வதக்கவும். இதனுடன் மூன்று தக்காளி நறுக்கி சேர்க்க வேண்டும்.

பின்னர் வெந்தய இலைகளை பொடிதாக நறுக்கி போடவும். முட்டை குழம்பிற்கு இது சுவை சேர்க்கும். அதனுடன் நான்கு பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், மூன்று ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மூன்று ஸ்பூன் மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.

பின்னர் புளி தண்ணீர் மற்றும் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும். எண்ணெய் பிரிந்தவுடன் முட்டைகளை போடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு இறுதியாக கொத்தமல்லி சேர்த்தால் முட்டை குழம்பு தயார்.

manithan


 



Post a Comment

0 Comments