கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் துவங்கப்பட்டது. இந்தியாவுக்கு தேவையான வருங்கால வீரர்களை அடையாளப்படுத்தும் நோக்கத்தில் துவங்கப்பட்ட அந்த தொடர் தற்போது விஸ்வரூப வளர்ச்சி அடைந்துள்ளது. அந்தத் தொடரால் நிறைய இளம் வீரர்கள் அடையாளம் காணப்பட்டு இந்தியாவுக்காக விளையாடுகின்றனர். அதே போல ஐபிஎல் தொடரால் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதிக்கும் பிசிசிஐ உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ளது.
முன்னதாக வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்களை விளையாட விடாமல் பிசிசிஐ நிறுத்தி வைத்துள்ளது. அதனால் தங்களை வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட அனுமதிக்குமாறு பல இந்திய வீரர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இருப்பினும் அதற்கு பிசிசிஐ செவி சாய்க்காததால் ஒரு கட்டத்தில் இந்தியாவுக்காக வாய்ப்பு பெறாத வீரர்கள் ஓய்வு பெற்று வெளிநாடுகளில் விளையாட செல்கின்றனர்.
அத்துடன் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களும் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளில் விளையாடுகின்றனர். எடுத்துகாட்டாக சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜெண்ட்ஸ் 2024 தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்து யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதை சொல்லலாம். இந்நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் புதிய ஐபிஎல் தொடரை உருவாக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடுவதற்கு பதிலாக இந்தியாவிலேயே விளையாட விரும்புகின்றனர். அதை பிசிசிஐயிடம் முன்னாள் வீரர்கள் சேர்ந்து கோரிக்கையாக முன் வைத்துள்ளனர். அந்த ஐடியாவை ஏற்றுக் கொண்டுள்ள பிசிசிஐ வருங்காலத்தில் முன்னாள் வீரர்களுக்கென்று ஐபிஎல் தொடரை நடத்த பரிசீலிக்க உள்ளது.
இது பற்றி டெய்னிக் ஜக்ரான் இணையத்தில் பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி கூறியது பின்வருமாறு. “இது தொடர்பாக முன்னாள் வீரர்களிடமிருந்து எங்களுக்கு முன்மொழிவு கிடைத்துள்ளது. அது தற்போது பரிசீலனையில் உள்ளது. அது முன்மொழிவு கட்டத்தில் மட்டுமே உள்ளது. இந்த வருடம் அதை நடத்த வாய்ப்பில்லை. இருப்பினும் அடுத்த வருடம் பரிசீலிக்கப்படலாம்”
“சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற மற்றும் ஐபிஎல் தொடரில் பங்கேற்காத வீரர்கள் அந்த லீக்கில் இடம் பெறுவார்கள்” என்று கூறினார். அந்த வகையில் பிசிசிஐ அமைப்பே நடத்துவதால் அதில் விளையாட முன்னாள் இந்திய வீரர்களுக்கு எந்த விதிமுறைகளும் தடையும் கிடையாது. எனவே அந்தத் தொடரில் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, யுவராஜ் சிங், ரெய்னா போன்ற நட்சத்திர முன்னாள் வீரர்கள் விரும்பினால் விளையாடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments