தினமும் நீங்கள் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டுமா.? 5 பயனுள்ள வழிகள் இங்கே!

தினமும் நீங்கள் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டுமா.? 5 பயனுள்ள வழிகள் இங்கே!


நாளொன்றுக்கு பொதுவாக சுமார் 10,000 ஸ்டெப்ஸ்கள் நடப்பது இதய ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்கிறது, உடல் எடையை நிர்வகிக்க, நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்த எளிய விஷயமானது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதோடு, நம்முடைய ஆயுள் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் சக்திவாய்ந்த அணுகுமுறையாக இருக்கிறது. எனினும் பலர் என்னது தினசரி 10,000 அடிகள் நடப்பதா என்று மலைக்கிறார்கள். தங்களது பிசி ஷெட்யூலுக்கு நடுவே எப்படி தினசரி பத்தாயிரம் ஸ்டெப்ஸ் நடப்பது என்று குழம்புகிறார்கள்.

நீங்களும் இவர்களில் ஒருவரா.!! உங்கள் தினசரி வழக்கங்களில் சிறிய மற்றும் நிலையான மாற்றங்களை செய்வது மற்றும் சில எளிதான வழிகளை பின்பற்றுவதன் மூலம் இந்த சிறந்த உடல் செயல்பாட்டை நீங்கள் பெரிதாக சிரமமின்றி செய்யலாம். தினமும் 10,000 ஸ்டெப்ஸ்கள் வாக்கிங் செல்ல வேண்டும் என்ற இலக்கை முடிக்க ஐந்து எளிய டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

காலை நடைப்பயிற்சி: உங்களின் வாக்கிங் இலக்கை பூர்த்தி செய்ய காலை நேரத்தில் செயல்பட துவங்குவது மிகவும் நன்மை அளிக்கும். காலை நேரத்தில் இயற்கையின் அழகை ரசித்தப்படி சுறுசுறுப்பான வாக்கிங் செல்வது உங்களை உற்சாகமாக வைப்பதோடு 10,000 ஸ்டெப்ஸ் என்ற இலக்கை எளிதில் அடைய துவக்கமாக இருக்கும். எனவே தினசரி காலை சீக்கிரம் தூங்கி எழுந்து உங்களால் முடிந்த தூரம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களது நாள் ஆரோக்கியமாக தொடங்கும்.

படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள்: நீங்கள் வேலை செய்யும் உங்களது அலுவலகம் அல்லது வேறு இடங்களில் மேலே ஏறி செல்வதற்கு லிஃப்ட் அல்லது எலிவேட்டர் இருந்தால் அதனை பயன்படுத்தாமல் முடிந்த வரை படிக்கட்டுகளை பயன்படுத்தி மேலே ஏறி செல்லுங்கள் மற்றும் கீழே இறங்கி வாருங்கள். இத எளிய டிப்ஸ் உங்களின் நடைப்பயிற்சி இலக்கை அடைய கணிசமாக உதவி செய்யும். தவிர இந்த பழக்கம் ​​​​உங்கள் கால்களை வலுப்படுத்தும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த லெக் வொர்க்அவுட்டாக இருக்கும்.

வீட்டு வேலைகள்: வீட்டு வேலைகளில் உங்களை ஈடுபடுத்தி கொள்வது தினசரி ஸ்டெப் கவுன்ட்டை அதிகரிக்க மற்றும் உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தை மேம்படுத்த உதவும் ஒரு பயனுள்ள வழியாகும். உதாரணமாக வீட்டை சுத்தம் செய்வது, மாப் போடுவது மற்றும் தூசிக்களாக இருப்பவற்றை சுத்த செய்து எடுத்து வைப்பது போன்ற எளிய பணிகள் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் உடலின் தசை செயல்பாட்டை வலுப்படுத்த உதவுகிறது.

மாலை நேரத்து உலா: காலையிலிருந்து சுட்டெரித்த சூரியன் மறையும் மாலை நேரத்தில் காற்றும் குளிர்ச்சியடையும். எனவே அதிகாலை நேரத்தை போலவே சூரியன் மறையும் அந்திமாலை நேரமும் தனித்துவமான அழகை கொண்டுள்ளது. எனவே ஓய்வெடுக்க. உங்களை மீண்டும் உற்சாகமாக்கி கொள்ள மாலை சரியான நேரமாக இருக்கும். மாலை நேரத்தில் ரிலாக்ஸாக நடந்து செல்வது உங்களுக்கு ஓய்வளிப்பதோடு, தினசரி ஸ்டெப் கவுன்ட்டை அதிகரிக்க எளிய வழியாக இருக்கிறது.

பணியிடத்தில் நடக்கவும்: 10,000 ஸ்டெப் என்ற இலக்கை அடைவதில் அலுவலகத்தில் நீங்கள் நடக்க நேரம் செலவழிப்பது உதவிகரமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா.? உதாரணமாக பார்க்கிங் ஏரியா, பஸ் ஸ்டாப் உள்ளிட்டவற்றில் இருந்து உங்கள் அலுவலகத்திற்கு செல்லும் தூரம் கொஞ்சம் தான் என்றால் அவ்விடத்திற்கு நடந்து செல்லலாம். அலுவலகத்தில் லிஃப்ட் இருந்தால் அதனை பயன்படுத்தாமல் நடக்கலாம். உங்கள் ஆஃபிஸிற்கு அருகிலுள்ள காஃபி கடைக்கு நடப்பது அல்லது மதிய உணவிற்கு பின் சில நிமிடங்கள் நடப்பது போன்ற சிறிய விஷயங்களை கவனத்தில் கொண்டால் நீங்கள் சிரமமின்றி தினமும் 10,000 ஸ்டெப்ஸ் என்ற இலக்கை எளிதாக அடையலாம்.

News18


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post