4279 நாட்கள்.. மிரட்டும் இந்தியா.. பாகிஸ்தான் ஏணி வெச்சாலும் எட்ட முடியாது.. ஆச்சர்ய புள்ளிவிவரம்

4279 நாட்கள்.. மிரட்டும் இந்தியா.. பாகிஸ்தான் ஏணி வெச்சாலும் எட்ட முடியாது.. ஆச்சர்ய புள்ளிவிவரம்


வங்கதேசத்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் தோற்றது. அதனால் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. அத்துடன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்து பாகிஸ்தான் அவமான சாதனையை பதிவு செய்தது. 

முன்னதாக அண்டை நாடாக இருப்பதால் இந்தியாவை விட பாகிஸ்தான் சிறந்த அணி என்று அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் பேசுவது வழக்கமாகும். அத்துடன் இந்தியாவை விட சாகின் அப்ரிடி, நாசீம் ஷா, ஹரிஷ் ரவூப் ஆகியோர் அடங்கிய தங்களுடைய வேகப்பந்து வீச்சு கூட்டணி உலகிலேயே தரமானது என்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் மார்தட்டினார்கள்.

அதனால் 2021 டி20 உலகக் கோப்பை போல 2022 டி20 உலகக் கோப்பை, 2023 ஆசிய கோப்பை தொடர்களில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று சோயப் அக்தர் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் அந்த சமயங்களில் பேட்டி கொடுத்தனர். ஆனால் 2022 டி20 உலகக் கோப்பை, 2023 ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பையில் பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய இந்தியா அபார வெற்றி பெற்றது. 

அங்கிருந்து தொடர்ந்து அசத்திய இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையையும் வென்று வரலாறு படைத்தது. மறுபுறம் சமீப காலங்களில் ஜிம்பாப்பே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் ஐசிசி தொடர்களில் தோற்ற பாகிஸ்தான் தற்போது சொந்த மண்ணில் மற்றொரு கத்துக்குட்டியான வங்கதேசத்திடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோற்றுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் கடைசியாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்து நேற்றுடன் 0 நாட்கள் ஆகிறது.

அதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் 18 நாட்களுக்கு முன்பும் வங்கதேசம் 154 நாட்களுக்கு முன்பும் தங்களது சொந்த மண்ணில் கடைசியாக டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தன. அந்தப் பட்டியலில் அடுத்ததாக நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா முறையே கடந்த 177, 405, 1179, 1324, 1682 நாட்களாக சொந்த மண்ணில் ஒரு தொடரில் தோல்வியை சந்திக்காமல் இருந்து வருகின்றன.

ஆனால் அந்தப் பட்டியலில் உலகிலேயே உச்சகட்டமாக இந்தியா தான் 4279 நாட்களாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோற்காமல் வீரநடை போட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதன் பின் கடந்த 12 வருடங்களாக 4279 நாட்களாக ஒரு தொடரில் கூட தோற்காமல் மிரட்டும் இந்திய அணி சொந்த மண்ணில் பாகிஸ்தானால் ஏணி வைத்தாலும் எட்ட முடியாத உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது.

crictamil


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post