செல்வ செழிப்புமிக்க மன்னரான சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா அழைப்பின்பேரில் பிரதமர் மோடி புருனே நாட்டுக்கு சென்றுள்ளார். புருனே பயணம் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மோடி.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தென்கிழக்கு ஆசிய நாடான புருனே நாட்டுக்கு சென்றுள்ளார். இதன்மூலம், புருனேவுக்கு பயணம் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மோடி. இந்தியா - புருனே இடையேயான 40 ஆண்டுகால உறவை வலுப்படுத்தும் விதமாக இந்தப் பயணம் அமையவுள்ளது. இந்தப் பயணத்தின்போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா அழைப்பின் பேரில் பிரதமர் மோடி புனே சென்றுள்ளார்.
புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத்துக்கு பிறகு அதிக காலம் ஆட்சி செய்த மன்னராக திகழக்கூடியவர். எனினும், தனது ஆடம்பர வாழ்க்கை, செழிப்பான செல்வம், ஆடம்பர சொகுசு கார்களின் கலெக்சன் காரணமாக பணக்கார மன்னராக அறியப்படுகிறார்.
ஹசனல் போல்கியாவின் கார் கலெக்சனில் 7,000 ஆடம்பர வாகனங்கள் உள்ளன. இவற்றில் 600 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஆகும். இவ்வளவு ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருப்பதற்கான உலக கின்னஸ் சாதனையே மன்னர் ஹசனல் போல்கியா படைத்துள்ளார்.
இதுதவிர, சுமார் 450 ஃபெராரி , 380 பென்ட்லி கார்களும் வைத்துள்ளார். மேலும், போர்ஷே, லம்போர்கினி, மேபேக், ஜாகுவார், பிஎம்டபிள்யூ மற்றும் மெக்லாரன் ரக கார்களும் ஹசனல் போல்கியாவின் கரேஜை அலங்கரிக்கின்றன.
இதில் ரூ .6 கோடி மதிப்பிலான பென்ட்லி டாமினேடர் எஸ்யூவி, 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் போன்ற பல்வேறு ரக கார்கள் அடக்கம். மன்னர் ஹசனல் போல்கியாவின் கரேஜில் உள்ள மொத்த கார்களின் மதிப்பே 5 பில்லியன் டாலர் ஆகும்.
2007-ம் ஆண்டு மன்னர் ஹசனல் தனது மகள் திருமணத்தின்போது தங்கம் பூசப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக அளித்தார். ஹசனல் போல்கியாவின் கார் கலெக்சன் என்பது அவரின் செல்வத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே.
அவர் வசிக்கும் அரண்மனையான இஸ்தானா நூருல் இமான் உலகின் மிகப்பெரிய அரண்மனை என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. இந்த அரண்மனையானது இரண்டு மில்லியன் சதுர அடி பரப்பளவுக்கு மேல் கட்டப்பட்டுள்ளது. அரண்மனையின் மேல்புறத்தில் தங்க உருண்டை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 5 நீச்சல் குளங்கள், 1,700 படுக்கையறைகள், 257 குளியல் அறைகள் மற்றும் 110 கார் கரேஜ்கள் உள்ளன. அரண்மனையில் உயிரியல் பூங்கா ஒன்றையும் நடத்துகிறார் மன்னர் ஹசனல். இதில் 30 வங்க புலிகள், பல்வேறு பறவை இனங்கள் வளர்க்கப்படுகின்றன.
மேலும், தனக்கென தனியாக போயிங் 747 விமானமும் வைத்துள்ள மன்னர் ஹசனல் போல்கியாவின் சொத்து மதிப்பு 30 பில்லியன் டாலர் ஆகும். இப்படியான செல்வ செழிப்பான மன்னரின் அழைப்பின் பேரில் தான் பிரதமர் மோடி புருனே சென்றுள்ளார். மோடிக்கு ஹசனல் போல்கியா உற்சாக வரவேற்பு அளிக்கவிருக்கிறார்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments