Ticker

6/recent/ticker-posts

Ad Code



நாக்கின் நிறத்தை வைத்து நீரிழிவு, பக்கவாதம், கோவிடை கண்டறியும் AI தொழில்நுட்பம்.. ஆராய்ச்சியாளர்கள் ஷாக்.!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனித நோயை கண்டறிவதில் ஆராய்ச்சியாளர்கள் முனைப்புடன் செயல்படுகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மத்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (MTU) மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (UniSA) ஆகியவை இணைந்து புதிய இமேஜிங் சிஸ்டத்தை வடிவமைத்துள்ளன. இதன் மூலம் நீரிழிவு, பக்கவாதம், இரத்த சோகை, ஆஸ்துமா, கல்லீரல், பித்தப்பை பிரச்சினைகள், கோவிட்-19, பிற வாஸ்குலர் பாதிப்புகள், இரைப்பை குடல் நோய்கள் போன்ற நோய்களை கண்டறிய முடியும்.

இது எப்படி வேலை செய்கிறது?

கம்ப்யூட்டர் அல்காரிதம் ஆனது உங்கள் நாக்கைப் பார்த்தாலே நோய்களை துல்லியமாக கண்டறியும்.

பொதுவாக, நீரிழிவு நோயாளிகளுக்கு நாக்கின் நிறம் மஞ்சளாக இருக்கும். புற்றுநோய் நோயாளிகளின் நாக்கு திக் க்ரீஸ் கோட்டிங் உடன் ஊதா நிறத்தில் இருக்கும். பக்கவாத நோயாளிகளின் நாக்கு பெரும்பாலும் வழக்கத்துக்கு மாறான சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று பாக்தாத்தில் உள்ள மத்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் மூத்த ஆசிரியர் அலி அல்-நாஜி தெரிவித்துள்ளார். இந்த ஆய்வானது டெக்னாலஜிஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டின் முக்கிய அம்சங்களாக, நாக்கின் நிறம், நாக்கின் வடிவம், கோட்டிங் ஷேட், கோட்டிங் டெப்த், ஓரல் மாய்சூர், நாக்கு வெடிப்புகள், காயங்கள், சிவப்பு புள்ளிகள் ஆகியவை அடங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றில், நாக்கின் நிறம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஆரோக்கியமான நாக்கு பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தை கொண்டிருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த AI மாடலானது பாரம்பரிய சீன மருத்துவத்தில் இருந்து 2,000 ஆண்டுகள் பழமையான முறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

அதன்படி:

நீரிழிவு நோயாளிகளுக்கு நாக்கின் நிறம் மஞ்சளாக இருக்கும், சில சமயங்களில் மஞ்சள் கோட்டிங் உடன் நீல நிறமாகவும் இருக்கும்.

புற்றுநோய் நோயாளிகளின் நாக்கு திக் க்ரீஸ் கோட்டிங் உடன் ஊதா நிறத்தில் இருக்கும்.

பக்கவாத நோயாளிகளின் நாக்கு பெரும்பாலும் வழக்கத்துக்கு மாறான சிவப்பு நிறத்தில் இருக்கும்.

வெள்ளை நிற நாக்கு இரத்தத்தில் இரும்புச்சத்து இல்லாததைக் குறிக்கிறது.

மஞ்சள் நிற நாக்கு அதிகரித்த உடல் வெப்பம், கல்லீரல் மற்றும் பித்தப்பை உறுப்பு நோய் ஆகியவற்றைக் குறிக்கிறது.

இண்டிகோ அல்லது வயலட் நிற நாக்கு வாஸ்குலர் அல்லது இரைப்பை குடல் பிரச்சனைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது.

அப்பெண்டிசிட்டிஸ் அறிகுறிகள் இருந்தால், நாக்கின் வெளிப்புறத்தில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

பாக்டீரியா அல்லது வைரஸ் கோவிட்-19 இன் தீவிரத்தைப் பொறுத்து நாக்கின் நிறம் மாறுபடும். லேசான நோய்த்தொற்றுகளில் நாக்கு இளஞ்சிவப்பு நிறமாகவும், மிதமான நோய்த்தொற்றுகளில் கருஞ்சிவப்பு நிறமாகவும், தீவிர நோய்த்தொற்றுகளில் அடர் சிவப்பு நிறமாகவும் (பர்கண்டி) இருக்கும்.

இதற்காக வடிவமைக்கப்பட்ட இமேஜிங் சிஸ்டத்தில் பொருத்தப்பட்ட கேமராக்கள் வாயிலாக 20 சென்டிமீட்டர் தூரத்தில் இருந்து நோயாளியின் நாக்கை படம்பிடித்து அதன் நிறம், வடிவம் மற்றும் தடிமன் ஆகியவற்றை ஆய்வு செய்ய முடியும். அந்த முடிவுகளின் அடிப்படையில் மனிதர்களின் நோய்களை எளிதாக கண்டறிய முடியும். இதன் மூலம் அறியப்படும் முடிவுகள் 98 சதவீதம் துல்லியமாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.


news18

 



Post a Comment

0 Comments