இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு வழக்கமாக செய்யும் சைடு டிஷ்ஷை செய்யாமல், சற்று வித்தியாசமாக சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டை உள்ளதா?
அப்படியானால் அந்த முட்டையைக் கொண்டு எப்போதும் செய்வது போன்று மசாலா செய்யாமல், சற்று வித்தியாசமாக ஆம்லெட் செய்து தொக்கு தயார் செய்யுங்கள். இந்த முட்டை ஆம்லெட் தொக்கு சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு முட்டை ஆம்லெட் தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை ஆம்லெட் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 4 * மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் * மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் * உப்பு - 1/4 டீஸ்பூன் * கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது) தொக்கு செய்வதற்கு... * எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் * சோம்பு - 1/4 டீஸ்பூன் * கறிவேப்பிலை - 1 கொத்து * வெங்காயம் - 3 (அரைத்தது) * இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் * பச்சை மிளகாய் - 2 * தக்காளி - 2 (அரைத்தது) * மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் * மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் * மல்லித் தூள் - 1 டீஸ்பூன் * கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் * உப்பு - சுவைக்கேற்ப * தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்துக் கொள்ள வேண்டும். * பின் சிறிய தாளிப்பு கரண்டியை எடுத்து அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஒரு கரண்டி ஊற்றி ஆம்லெட் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து முட்டை கலவையையும் சிறு சிறு ஆம்லெட்டுகளாக போட்டு ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். * பின் அதில் அரைத்த வெங்காயத்தை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். * பிறகு அதில் பச்சை மிளகாய் மற்றும் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். * அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும். * பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து மூடி வைத்து 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும். * 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் ஆம்லெட்டுகளைப் போட்டு, மூடி வைத்து 1 நிமிடம் வேக வைக்க வேண்டும். * பின் மூடியைத் திறந்து ஆம்லெட்டுகளை திருப்பிப் போட்டு, 1 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான முட்டை ஆம்லெட் தொக்கு தயார்.
boldsky
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments