Ticker

6/recent/ticker-posts

நம்பர் ஒன்னா இருக்கும் பும்ரா.. இதை செஞ்சா என்னை மட்டுமல்ல கபில் தேவையும் மிஞ்சுவாரு.. ஜஹீர் கான் அட்வைஸ்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் வெற்றியில் தம்முடைய பங்காற்றினர். அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் கபில் தேவ், ஜவகள் ஸ்ரீநாத், ஜஹீர் கான், முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு பின் 400 விக்கெட்டுகள் எடுத்த 6வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் அவர் படைத்தார். 

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் தற்சமயத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஜஸ்ப்ரித் பும்ரா நம்பர் ஒன் பவுலராக திகழ்வதாக ரிக்கி பாண்டிங், வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்கள் சமீபத்தில் பாராட்டியிருந்தனர்.

நம்பர் ஒன் ஜஸ்ப்ரித் பும்ரா: 

இந்நிலையில் தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் பவுலராக செயல்பட்டு வரும் ஜஸ்ப்ரித் பும்ரா தம்முடைய உடலை கவனித்து தொடர்ந்து ஃபிட்டாக விளையாட வேண்டும் ஜஹீர் கான் தெரிவித்துள்ளார். அதை செய்தால் கபில் தேவ் மற்றும் தம்மைப் போன்றவர்களை முந்தி அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளராக பும்ரா சாதனை படைக்க வாய்ப்புள்ளதாகவும் ஜகீர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இது பெரிய சாதனை. ஆனால் இந்த பவுலர் இன்னும் சாதிக்க நிறைய இருக்கிறது. அவர் அந்த சாதனையை தொடர்ந்து துரத்துவார். ஏனெனில் பும்ரா போன்றவரை நீங்கள் உலகின் நம்பர் ஒன் பவுலர் என்று சொல்வதற்கு தயங்கமாட்டீர்கள்”

ஃபிட்னெஸ் முக்கியம்: 

“இந்த நேரத்தில் அவர் தன்னுடைய உடலைப் பற்றி தெரிந்து வைத்திருப்பார் என்று நம்புகிறேன். அதை வைத்து அவர் ஃபிட்டாக இருந்து தொடர்ந்து காயங்களை தவிர்த்து முன்னோக்கி விளையாட வேண்டும். அதைச் செய்தால் அவர் இந்த சாதனைகளை தாண்டுவார். ஏனெனில் அவர் நிறைய கிரிக்கெட்டில் விளையாடுகிறார். பொதுவாக ஒரு தரமான பவுலர் பிட்ச், கால சூழ்நிலைகளைப் பற்றி சிந்திக்க மாட்டார்”

“ஸ்விங், வேகம், மெதுவான பந்துகள், யார்க்கர் போன்றவற்றை உங்களுடைய அனுபவத்தின் அங்கமாக பயன்படுத்த முடியும். உங்களிடம் திறமை இருக்கும் போது நீங்கள் சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இல்லையே என்று சிந்திக்க மாட்டீர்கள். மாறாக இருக்கும் சூழ்நிலைகளை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அசத்துவீர்கள்” என்று கூறினார். அந்த வகையில் இதே போல விளையாடினால் 687 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கும் கபில் தேவை கேரியர் முடியும் போது பும்ரா முந்துவதற்கு வாய்ப்புள்ளது.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments