ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கம்.. வங்கதேச தொடருக்காக ரோஹித் தலைமையில் வெய்ட்டான இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ

ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கம்.. வங்கதேச தொடருக்காக ரோஹித் தலைமையில் வெய்ட்டான இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ


இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தங்களுடைய சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள அத்தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்க உள்ளது. அத்தொடருக்கு முன்பாக இந்திய வீரர்கள் 2024 துலீப் கோப்பையில் விளையாடுகின்றனர்.

இந்நிலையில் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் கடந்த இங்கிலாந்து தொடரில் மிரட்டிய ஜெய்ஸ்வால் துவக்க வீரராக தேர்வாகியுள்ளார். அதைத் தொடர்ந்து சுப்மன் கில் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.

மிடில் ஆர்டரில் கே.எல் ராகுல் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயத்தை சந்தித்த ராகுல் தற்போது குணமடைந்து துலீப் கோப்பையில் அரை சதமடித்ததால் மீண்டும் தேர்வாகியுள்ளார். ஆனால் அதே தொடரில் காயமடைந்து வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது குணமடைந்து துலீப் கோப்பையில் இந்தியா டி அணியின் கேப்டனாக விளையாடினார்.

இருப்பினும் அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு அதற்கு பதிலாக சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. அதன் பின் விக்கெட் கீப்பர்களாக துலீப் கோப்பையில் அசத்தலாக விளையாடி கம்பேக் கொடுத்த ரிஷப் பண்ட், கடந்த இங்கிலாந்து தொடரில் துருவ் ஜுரேல் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். ஆல் ரவுண்டர்களாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்பின்னராக குல்தீப் யாதவ் தேர்வாகியுள்ள நிலையில் வேகப்பந்து வீச்சு துறையில் முகமது சிராஜ் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயாள் ஆகிய புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

2024 வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் ஃபண்ட் (கீப்பர்), துருவ் ஜுரேல் (கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், யாஷ் தயாள், ஜஸ்ப்ரித் பும்ரா

crictamil


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post