பொலிஸார் சுயாதீனமாக செயற்படுதல்:
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், அரசியல் தலையீடுகள் இன்றி பொலிஸார் சுயாதீனமாக செயற்படுவதை உறுதி செய்வதற்கும் விரைவான நடவடிக்கைகளை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக புதிய பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் நியமனம்:
1. ஜனாப். ஹனிப் யூசுப் அவர்கள் மேல் மாகாண ஆளுநராகவும்,
2 திரு சரத் பண்டார சமரசிங்க அபயகோன் - மத்திய மாகாண ஆளுநராகவும்,
3. திரு பந்துல ஹரிச்சந்திர - தென் மாகாண ஆளுநராகவும்,
4. திரு. திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய - வடமேல் மாகாண ஆளுநராகவும்,
5. திரு. வசந்தகுமார விமலசிறி - வடமத்திய மாகாண ஆளுநராகவும்,
6. திரு. நாகலிங்கம் வேதநாயகம் - வடமாகாண ஆளுநராகவும்,
7. திரு. கபில ஜயசேகர - ஊவா மாகாண ஆளுநராகவும்,
8. திருமதி. சம்பா ஜானகி ராஜரத்ன - சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும்,
9. ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுனராகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
ஐ.எம்.எப். ஜனாதிபதிக்கு வாழ்த்து:
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் Christina Jo jeeva இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசானாயகவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற தேர்தலில்
போட்டியிட மாட்டார்:
ஜனாதிபதிப் பதவி விலகும் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் தேசியப் பட்டியலில் இடம் பெற மாட்டார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
தேசிய விடயங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஆலோசனைப் பாத்திரமொன்றை மேற்கொள்வார் என எதிர் பார்க்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரியின் பிரத்தியேக செயலாளர்:
அக்கரைப்பற்றுவைச் சேர்ந்த, சட்ட முதுமாணி பட்டம் பெற்றுள்ள ஹஸனா சேகு இஸ்ஸதீன் அவர்கள் பிரதம மந்திரியின் பிரத்தியேக செயலாளராக . நியமனம் பெற்றுள்ளார்.
மக்கள் வரிப்பணத்தில் எரிபொருள் நிரப்பி ஓடிய
வாகனங்கள்:
ஜனாதிபதி காரியாலயத்திற்கு சொந்தமான பல வாகனங்கள் உறவினர்கள், ஆதரவாளர்களால் பயன் படுத்தப் பட்டுள்ளன.
இவற்றைப் பாவித்தவர்கள் பாவித்தவர்கள் யார் என்று தெரியாது, கொண்டு வந்து போட்டுவிட்டுச் செல்கின்றனர்.
மக்களின் வரிப்பணத்தில் சுகபோக வாழ்க்கையை அனுபவித்துள்ளதை இது உணர்த்துகின்றது.
இந்த வாகனங்கள் யார் பாவித்தது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, ஜனாதிபதி காரியாலயத்திலிருந்து காணாமற்போயுள்ள ஏனைய வாகனங்களையும் கண்டு பிடிப்பதில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இன்று அநூரகுமார ஜனாதிபதியாக வந்திரா விட்டால் இந்த வாகனங்கள் இப்போதும் வீதிகளில் மக்கள் வரிப்பணத்தில் எரிபொருள் நிரப்பி ஓடிக் கொண்டிருக்கும்.
ஜனாதிபதி ஹெலி பயன்படுத்தவில்லை!
ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட ஜனாதிபதி அனுரகுமார கண்டிக்கு விஜயம் செய்தபோது ஹெலிகொப்டர் பயன்படுத்தப்படவில்லை!
வழிபாட்டில் ஈடுபடவும், மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்குமாகவும் ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.
ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவு தரும் தகவல்படி, பாதுகாப்புத் தொடரணியின் ஒரு பகுதியாக டிஃபென்டர் வாகனத்திலேயே அவர் வீதியில் பயணித்தார்.
CLICK 👇👇👇
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments