லைக் பண்ணி நீங்க அதிகமாக சாப்பிட்டாலும் ஃபிட்டாக இருக்கலாம்... இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க....

லைக் பண்ணி நீங்க அதிகமாக சாப்பிட்டாலும் ஃபிட்டாக இருக்கலாம்... இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க....


தற்போது அனைவரையும் வாட்டி வதைக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு தான். அதிகமானோர் எடையைக் குறைக்க டயட், ஜிம் என தங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்கின்றனர். இதனால் தங்களுக்கு பிடித்த உணவை கூட சாப்பிட முடியாமல் கஷ்டப்படுவர்.

ஆனால் உங்களுக்கு விருப்பமான உணவை அதிகமாக சாப்பிட்டாலும் ஃபிட்டாக இருக்க முடியும் என கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆம். இதற்கு நீங்கள் பின்பற்றவேண்டிய டிப்ஸ் இதுதான்!

அதிக மெட்டபாலிசம் உள்ளவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். மரபியல், வயது, பாலினம், உடல் கொழுப்பு மற்றும் உடல் செயல்பாடு போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து வளர்சிதை மாற்ற விகிதம் மாறுபடும். வளர்சிதை மாற்ற விகிதம் என்பது உங்கள் உடல் நீங்கள் உண்ணும் உணவை திடமான அல்லது திரவமாக மாற்றும் விகிதமாகும்.

இது கலோரி குறைப்பை தீர்மானிக்கும். எனவே ஒரு நபரின் வளர்சிதை மாற்றம் அதிகமாக இருப்பதால், கலோரிகளை எரிக்கும் உடலின் திறன் அதிகமாகும். எனவே ஒரு நபர் தனது கூடுதல் கிலோவைக் குறைத்து ஆரோக்கியமான எடையுடன் இருக்க முடியும். உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படும் 4 பழக்கவழங்கள் குறித்து இங்கு காண்போம்.

1. உடற்பயிற்சி செய்வதால் பலன் தரும் : அதிக வளர்சிதை மாற்றம் உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி ஒரு அடிப்படை பழக்கம். பொதுவாக கார்டியோ பயிற்சிகள், தசை பயிற்சிகள், ஓடுவது அல்லது சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றை செய்வதன் மூலம் கலோரிகள் வேகமாக கரையும். எனவே தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

2. சமச்சீர் உணவு: உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நினைப்பவர்கள் நாள் முழுவதும் சமச்சீரான உணவை உண்ண வேண்டும். ஒவ்வொரு 3 முதல் 4 மணி நேரத்திற்கும் ஒரு முறை சாப்பிடுவது உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களைத் தடுக்கிறது. மேலும் நீடித்த ஆற்றல் மற்றும் பசியின்மைக்கு உதவுகிறது.

3. சரியான நீரேற்றம்:  நாள் முழுவதும் நீரேற்றமாக இருங்கள். செரிமானம், ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் அதிக வெப்பநிலை கட்டுப்பாடு ஆகியவற்றிற்குதண்ணீர் சத்து முக்கியமானது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியம். அதனால்தான் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் மட்டுமின்றி ஜூஸ், இளநீர் என அருந்தலாம்.

4. நல்ல தூக்கம்: ;வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க தினமும் போதுமான அளவு தூக்கம் அவசியம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிக்க நல்ல தரமான தூக்கத்தை பின்பற்ற வேண்டும். இது பசியின்மை மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகிறது. அதனால்தான் போதுமான தூக்கம் அவசியம். மேலே சொன்ன விஷயங்களை நாள்தோறும் கடைபிடித்து பாருங்கள் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

News18


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post