முதலீடு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த மலேசியா - நியூசிலாந்து இரு நாடுகளும் உறுதிக் கொண்டுள்ளது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டபர் லக்சன் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு மலேசியா வந்துள்ளார்.
அரச மரியாதையுடன் அவர் வரவேற்கப்பட்டார்.
அதன் பின் அவர் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்து பேசினார்.
மலேசியா, நியூஸிலாந்து இடையே பல்வேறு துறைகளில் குறிப்பாக முதலீடு, வர்த்தகம், சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் மாணவர் பரிமாற்றம், உணவு தொழில்நுட்பம், ஹலால் தொழில் ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதாக டத்தோஶ்ரீ அன்வார் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.
தென் சீனக் கடல் பிரச்சினை, ரஷ்யா, உக்ரைன் நெருக்கடி, காஸாவின் நிலைமை ஆகியவற்றைத் தொட்டு விரிவான விவாதங்களுடன்,
ஏற்கெனவே நிறுவப்பட்ட உறவை வலுப்படுத்துவதில் இரு நாடுகளும் உறுதி கொண்டுள்ளன என்று அவர் கூறினார்.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments