ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள பல நாடுகளின் பெயர்கள் ‘ஸ்தான்’ என முடிவதை நீங்கள் பார்த்திருக்கலாம். உதாரணமாக துர்க்மெனி‘ஸ்தான்’, பாகி‘ஸ்தான்’, ஆப்கானி‘ஸ்தான்’,..இன்னும் பல
நாம் வாழும் உலகில் பல நாடுகள் காணப்படுகின்றன. ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. அவை தங்களுக்கென தனித்துவமான பெயர்களை கொண்டு விளங்குகின்றன. சில நாடுகளின் பெயர்கள் அர்த்தமுள்ளவையாகவும் சில நாடுகளின் பெயர்கள் அர்த்தமற்றவையாகவும் இருக்கின்றன.
ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள பல நாடுகளின் பெயர்கள் ‘ஸ்தான்’ என முடிவதை நீங்கள் பார்த்திருக்கலாம். உதாரணமாக துர்க்மெனி‘ஸ்தான்’, பாகி‘ஸ்தான்’, ஆப்கானி‘ஸ்தான்’,..இன்னும் பல நாடுகள்.
இவற்றின் பெயர்கள் ஏன் ‘ஸ்தான்’ என முடிகின்றன. இதற்கு ஏதேனும் பொருள் உள்ளதா என யோசித்திருக்கிறீர்களா. அவ்வாறு யோசித்திருந்தால் உங்களுக்கான பதிலை நீங்கள் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
மொழியிலாளர்களின் கருத்துப்படி பார்க்கையில் சிலர் ‘ஸ்தான்’என்னும் சொல் பாரசீக மொழியில் இருந்து வந்ததாகவும் வேறு சிலர் ‘ஸ்தான்’என்னும் சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து வந்ததாகவும் கூறுகின்றனர். எதுவாக இருப்பினும் பாரசீக மொழியில் ‘ஸ்தான்’என்ற வார்த்தைக்கு ‘இடம்’ என்பது பொருள் என மொழியிலாளர்கள் கூறுகின்றனர்.
அதனை நாடு எனவும் பொருள் கொள்ளலாம் எனவும் கூறுகின்றனர். அதாவது ஆப்கானிஸ்தான் என்பதை பிரிக்கும் போது ஆப்கான்+ஸ்தான் எனப் பிரியும். இதன் பொருள் “ஆப்கானியர்கள் வசிக்கும் இடம்” அல்லது “ஆப்கானியர்கள் வசிக்கும் நாடு” என்பதாகும்.
இப்போது புரிந்ததா. ஏன் பல நாடுகள் ‘ஸ்தான்’ என்ற வார்த்தையுடன் முடிவடைகிறது என்று. நீங்கள் தெரிந்துகொண்டதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
News18 Tamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments