Ticker

6/recent/ticker-posts

கொலைகாரர்களாகும் பசு காவலர்கள் : பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெறுப்புத்தன்மை!


கடந்த ஆகஸ்ட் 28ஆம் நாள், மகாராஷ்டிரத்தில் மாட்டிறைச்சி வைத்திருக்கிறார் என இஸ்லாமிய முதியவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், தற்போது அரியானா மாநிலத்தில் பசு திருடினார் என பொய் குற்றம் சாட்டப்பட்டு, பள்ளி மாணவர் ஆர்யன் உயிரை பறித்துள்ளனர் பசு காவலர்கள் என்ற பெயரிலான குண்டர்கள்.

இவ்விரண்டு சம்பவங்களுக்கும் இடையில் உள்ள இரு தொடர்புகள், இவ்விரண்டுமே மனிதநேயத்திற்கு எதிரானவை, இவ்விரண்டுமே பா.ஜ.க தலைமையிலாக கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில் அரங்கேறியவை என்பது தான்.

அதிலும், குற்றம்சாட்டப்பட்டு குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி, உயிரிழக்க நேரிடும் பெரும்பான்மையானோர் சிறுபான்மையினத்தவர்களாக இருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வயதானவராக இருந்தாலும் சரி, சிறுவராக இருந்தாலும் சரி அநீதி தொடரும் என்பதே இத்தாக்குதல்கள் உணர்த்துவதாகவும் அமைந்துள்ளன. அதற்கு, மகாராஷ்டிரத்தில் தாக்கப்பட்ட அஷ்ரஃப் என்கிற முதியவரின் வயது 72, அரியானாவின் கொல்லப்பட்ட ஆர்யன் என்கிற சிறுவனின் வயது 17 என்பதே எடுத்துக்காட்டாகவும் உள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர சம்பவத்தில் தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது வெறும் பெயருக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதத்துடன் பிணை வழங்கப்பட்ட நிலையே, ஆர்யன் வழக்கில் கைது செய்யப்பட்ட அனில் கெளசிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ் மற்றும் செளரப் ஆகியோருக்கும் என்ற எண்ணமும் வலுக்கத்தொடங்கியுள்ளது.

இவ்வாறு, தாக்குதல் நடத்தும் குண்டர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளே, அவர்களை மேலும் தாக்குதல் நடத்த தூண்டி வருகிறது என்ற குற்றச்சாட்டும், பா.ஜ.க மாநில அரசுகளின் மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளாக அமைந்துள்ளன.

இதற்கிடையில் தான், கடந்த வாரம், “இஸ்லாமியர்கள் கையில் அசாம் மாநில ஆட்சி செல்ல அனுமதிக்க மாட்டேன்” என பா.ஜ.க மூத்த தலைவரும், அசாம் மாநில முதல்வருமான ஹிமாந்தா சர்மா வெறுப்பு கருத்தை வெளிப்படுத்தி, சிறுபான்மையின தாக்குதல்களுக்கு முதன்மை காரணமானோர், மாநில தலைமை பொறுப்பாளர்களே என நிரூபித்துள்ளார்.

kalaignarseithigal


 Ai SONGS

 



Post a Comment

0 Comments