விசா மோசடி வழக்கு: இலங்கை உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த குடிநுழைவுத்துறை பணிப்பாளர் கைது

விசா மோசடி வழக்கு: இலங்கை உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த குடிநுழைவுத்துறை பணிப்பாளர் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் (சட்ட முதுமாணி),ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், பாட்டலி சம்பிக ரணவக்க ஆகியோரும் வேறு சிலரும் உயர் நீதிமன்றத்தில் வீ எப் எஸ்  ஈ- விசா மோசடி தொடர்பில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில், முறைகேடான இலத்திரனியல் விசா தொடர்பாக, அமைச்சரவை வழங்கிய அனுமதிக்கு எதிராக. உயர் நீதிமன்றம் விதித்திருந்த  இடை காலத் தடை உத்தரவை அமுல்படுத்தத் தவறியதால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திறகாக குடி வரவு குடியகல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் வரை சிறையில் வைக்குமாறு உயர் நீதி மன்றம் புதன் கிழமை பிற்பகல் (25) உத்தரவிட்டுத்  தீர்ப்பளித்தது.

வழக்கு முற்றாக விசாரித்து முடியும்  வரை அவர் விளக்க மறியலில் வைக்கப்படுவார் எனவும் நீதியரசர்கள் குழாம் தெரிவித்தது.

நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன,அச்சல வெங்கப்புலி,குமுதினி விக்கிரமசிங்ஹ ஆகியோர் முன்னிலையில் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது.
 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் தாமாகவே இந்த வழக்கில்  வாதாடி வருகின்றனர். நேற்று (25) ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம், பிரதிவாதியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோர் பலமான வாதங்களை முன்வைத்தனர்.

தங்கள் "எஜமானர்" களாகிய  அமைச்சர்களுக்கு அடிபணிந்து சேவகம் புரியும் ஏனைய அரச அதிகாரிகளுக்கும் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் பொழுது சுட்டிக்காட்டினர்.

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, அங்கிருந்து ,குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைப்பதற்காக சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.

இந்த பாரிய விசா மோசடி பற்றி அண்மைக் காலமாக பாராளுமன்றத்திலும்,பொது வெளியிலும் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.மேற்படி மனுதாரர்கள் மூவரும் கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற நிதிக்குழுவின் உறுப்பினர்கள் ஆவர். இவர்களே இந்த பாரிய ஊழலை அம்பலப்படுத்தி அதனை முறியடிப்பதில் முன் நிற்கின்றனர்.

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post