Ticker

6/recent/ticker-posts

மகளை கோடாரியால் கொன்ற தந்தை -உடல் அருகே அமர்ந்து.. நடுங்க வைத்த சம்பவம்!


மகளைக் கொடூரமாகக் கொலை செய்த தந்தை, மகளின் உடல் அருகே அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பஹ்ரைச் பகுதியைச் சேர்ந்தவர் நயீம் கான். இவருக்கு 17 வயதில் குஷ்பு என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் இவரது மகள், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்குத் தெரிந்துள்ளது .

இதனால் குஷ்புவின் தந்தை கண்டித்ததாகவும், வேறொரு மாப்பிள்ளையைத் தேடி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் நயீம் கான் தனது மகளை வீட்டில் காணவில்லை எனக் கூறி , அவரது காதலன் வீட்டுக்கு வந்துள்ளார்.அப்போது வீட்டில் இருவரும் தனிமையிலிருந்துள்ளனர் .

இதனைக் கண்ட அவரது தந்தை அந்த இளைஞரை விரட்டியுள்ளார்.ஆனால் அந்த இளைஞரோ தப்பியோடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நயீம் கான், தனது மகள் குஷ்புவைக் கோடாரியால் கைகள், தலை, கால்களை என மொத்தமாக துண்டுத்துண்டாகக் கடுமையாகத் தாக்கி வெட்டி படுகொலை செய்தார்.

இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர் . உடனடியாகக் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது நடுரோட்டில் வைத்து மகளைக் கொடூரமாகக் கொலை செய்த தந்தை, மகளின் உடல் அருகே அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த 17 வயது பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதைக்காக அனுப்பி வைத்தனர் . மேலும் தாய் அளித்த புகாரின் பேரில், தந்தை நயீம் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தக் கோரச் சம்பவம் உத்தரப் பிரதேச மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ibctamilnadu


 Ai SONGS

 



Post a Comment

0 Comments