Ticker

6/recent/ticker-posts

ஒமிக்ரானுக்கு அடுத்த வகை.. அதிக அளவில் பரவும் என ஆய்வாளர்கள் அச்சம்!


கொரோனா வைரஸின் புதிய வகையால் மேற்கத்திய நாடுகளில் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதன் தீவிரம் இன்னும் அதிகமாகும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவி, உலகம் முழுவதிம் பலரை பலி கொண்டது. இதற்கான தடுப்பூசியை கண்டுபிடித்த பிறகும், கொரோனா வைரஸின் பல வகைகள் உருவானது.

கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்ட எக்ஸ்.இ.சி (XEC) எனும் கோவிட் வைரஸின் புதிய வகை, இதுவரை பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க், சீனா உட்பட 27 நாடுகளில் பரவியுள்ளது.

XEC எனும் இந்த புதிய வகை, முந்தைய ஒமிக்ரான் வகையில் இருந்து உருவானதாகும். குளிர் காலத்தில் வேகமாக பரவத்தக்க சில புதிய பிறழ்வுகளை இந்த வைரஸ் கொண்டிருப்பதாகவும், தடுப்பூசிகள் பயன்பாடு காரணமாக இந்த வகையால் மனிதர்களுக்கு தீவிரமான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

முந்தைய கொரோனா வகைகளை போன்றே சளி அல்லது காய்ச்சல், அதிக உடல் வெப்பம், உடல் வலி, சோர்வு, இருமல் ஆகியவை அறிகுறிகளாக உள்ளன.

இந்தியாவில் இருந்து இதுவரை XEC பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், இது ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி விரைவில் ஆதிக்கம் செலுத்தும் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

news18



 Ai SONGS

 



Post a Comment

0 Comments