கைகளில் இப்படி தோல் உறிய என்ன காரணம் தெரியுமா?... அதை போக்குவதற்கான வழிகள் இதோ!

கைகளில் இப்படி தோல் உறிய என்ன காரணம் தெரியுமா?... அதை போக்குவதற்கான வழிகள் இதோ!


வறண்ட சருமத்தால் அடிக்கடி தோல் உரிந்தால், வெதுவெதுப்பான நீரில் கைகளை 10 நிமிடங்கள் மூழ்க வையுங்கள். இதனால் கைகள் மென்மையாகும். வறட்சி நீங்கும். ஒரு நாளைக்கு உங்கள் கைகளை எத்தனை முறை பார்த்துக் கொள்கிறீர்கள் என்பதை கணக்கிட முடியுமா..? நிச்சயம் கணிப்பது கடினம்தான். இப்படி கணக்கிடவே முடியாத அளவு பார்த்துக்கொள்ளும் கைகளின் தோல் உரிந்து, வறண்டு தோன்றினால் எப்படி இருக்கும்?. அதை நீக்க இரண்டு, மூன்று நாட்கள் கஷ்டப்படுவோம். அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் ஏன் உரிகிறது என்ற காரணம் தெரியுமா? எளிய முறையில் எவ்வாறு நீக்குவது என தெரியுமா? தோல் உரியக் காரணம் : அடிக்கடி கை உரிதல், வறண்ட சருமம், சூரிய ஒளி தாக்குதல், சொரியாசிஸ், கெமிக்கல் நிறைந்த சோப், க்ரீம்கள், பருவ மாற்றம், அலர்ஜி, அரிப்பு போன்ற காரணங்களால் கைகளில் தோல் உரிகிறது.

வறண்ட சருமத்தால் அடிக்கடி தோல் உரிந்தால், வெதுவெதுப்பான நீரில் கைகளை 10 நிமிடங்கள் மூழ்க வையுங்கள். இதனால் கைகள் மென்மையாகும். வறட்சி நீங்கும்.

ஒரு நாளைக்கு உங்கள் கைகளை எத்தனை முறை பார்த்துக் கொள்கிறீர்கள் என்பதை கணக்கிட முடியுமா..? நிச்சயம் கணிப்பது கடினம்தான்.

இப்படி கணக்கிடவே முடியாத அளவு பார்த்துக்கொள்ளும் கைகளின் தோல் உரிந்து, வறண்டு தோன்றினால் எப்படி இருக்கும்?. அதை நீக்க இரண்டு, மூன்று நாட்கள் கஷ்டப்படுவோம். அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் ஏன் உரிகிறது என்ற காரணம் தெரியுமா? எளிய முறையில் எவ்வாறு நீக்குவது என தெரியுமா?

தோல் உரியக் காரணம் : அடிக்கடி கை உரிதல், வறண்ட சருமம், சூரிய ஒளி தாக்குதல், சொரியாசிஸ், கெமிக்கல் நிறைந்த சோப், க்ரீம்கள், பருவ மாற்றம், அலர்ஜி, அரிப்பு போன்ற காரணங்களால் கைகளில் தோல் உரிகிறது.

அதுமட்டுமன்றி பாக்டீரியா தொற்று, நோய் தொற்று, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களாலும் தோல் உரியலாம் என கூறப்படுகிறது.

இப்படி தோல் உரிந்தால் என்ன செய்ய வேண்டும் : வறண்ட சருமத்தால் அடிக்கடி தோல் உரிகிறது என்றால் வெதுவெதுப்பான நீரில் கைகளை 10 நிமிடங்கள் மூழ்க வையுங்கள். இதனால் கைகள் மென்மையாகும். அத்துடன் வறட்சி நீங்கும்.

விட்டமின் E எண்ணெய்யை கைகளில் தடவி மசாஜ் செய்தால் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். அதனால் கைகளும் பளபளப்பாகும்.

கற்றாழை : கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி கைகளில் மசாஜ் செய்து காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.

தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெய்யை கைகளில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்தால் கைகள் பளபளப்பாகும்.

News18Tamil



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post