அரசின் அதிரடி மாற்றங்கள்-13

அரசின் அதிரடி மாற்றங்கள்-13


நிலாந்த ஜெயவர்த்தன இழப்பீட்டுத் தொகையைக் கட்டினார்:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டு தொகையை நிலாந்த ஜெயவர்த்தன முழுமையாக செலுத்தினார் 

இலங்கையின் மறுசீரமைப்பு வேலைத் 
திட்டங்களுக்கு உலக வங்கி
200 மில்லியன் டொலர் நிதியுதவி:

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால்,  மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கு அமைவான ஒப்பந்தத்தில் கைசாத்திடும் நிகழ்வு 2024.10.07 அன்று,  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதோடு, இந்த ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில்,  இலங்கை அரசாங்கத்தின் நிதி அமைச்சர் ​கே.எம்.மஹிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோர் கையொப்பமிட்டனர். 

இலங்கையின் மறுசீரமைப்பு, நிலைப்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை சுமுக நிலைக்குக் கொண்டு வருவதற்கான அபிவிருத்தி கொள்கைகளுக்கு நிதியளிக்கும் வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ்  இந்த நிதி உதவி இலங்கைக்கு கிடைத்துள்ளது.  

இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் 2023 ஆண்டில் செயற்படுத்தப்பட்டதுடன், பிரதான மூன்று துறைகளின் கீழ் ஏழு வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்ட பின்னர்,  500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும்.

போலீஸ் பொதுமக்கள் தினம்

பொலிஸ் மாஅதிபரின் "பொதுமக்கள் தினம்" எதிர்வரும் 11ம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி:

2024.10. 07 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி கடோனோவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா சந்தித்து கலந்துரையாடினார். 

அதன்போது, இலங்கையில் வலுசக்தி மற்றும் சிறு தொழில் முயற்சிகளை மேம்படுத்தத்  தேவையான நிதியுதவிகளை வழங்கவும், நிதித்துறையின் முன்னேற்றத்துக்கு தேவையான நிதியுதவிகளை வழங்கவும் அவர் இணக்கம் தெரிவித்தார். 

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்காக சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு அவசியமான வசதிகளுக்கான நிதி உதவிகளை வழங்கவும், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க வடக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தியை மேம்படுத்த உதவிகளை வழங்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி இணக்கம் தெரிவித்தார். 

இதன்போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி  கடோனோவுடன் இலங்கைக்கான முன்னெடுப்புக்களின் பிரதானி சொல்பொத் மெம்பேடோவா, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பணிப்பாளர் நாயகம் டீ.ஏ.பி.அபேசேகர, பணிப்பாளர் உதேனி உடுகஹபத்துவ, சிரேஷ்ட பொருளாதார அதிகாரிகளான ஹஷிதா விக்ரமசிங்க மற்றும் லக்‌ஷினி பெர்னாண்டோ ஆகியோரும் இந்நிகழ்வின்போது கலந்துகொண்டனர்.

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்  இராஜினாமா:

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்ன தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

கோட்டாபய பிரத்தியேக செயலாளர்  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைப்பு:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஷ்வர பண்டார குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இறக்குமதியாளர், வர்த்தக சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு:

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜீ.இலமநாதன், செயலாளர்களான ஜீ.ராஜேந்திரன் மற்றும் அப்துல் அஸீல் அலி மொஹமட் மற்றும் அதன் உறுப்பினர்களுடன் இன்று கடந்த 2024.10.07 அன்று விஷேட கலந்துரையாடல் ஒன்றினை ஜனாதிபதி நடத்தியுள்ளார்.  அதன்போது சந்தை நிலவரங்கள் குறித்து தீர்க்கமாக கலந்துரையாடிய அதேநேரம், உணவு இறக்குமதி மற்றும் வர்த்தகத்தில் தாக்கம் செலுத்தும் பிரதான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

உண்மைக்கு புறம்பான தகவல்:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பதில் பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் கடமையில் தற்போதும் 163 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இ.தொ.கா. உப தலைவர் பாரத் அருள்சாமி 
விலகுவதாக அறிவிப்பு:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக பாரத் அருள்சாமி கட்சியின் பொதுச் செயலாளருக்கு கடிதம்

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி உதயம்:

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் கூட்டணி ஸ்தாபித்துள்ளதாக ரமேஷ் பத்திரண அறிவித்துள்ளார்.





 



Post a Comment

Previous Post Next Post