Ticker

6/recent/ticker-posts

Ad Code



குப்பையில் எடுத்த ஓவியம்… கோடீஸ்வரரான மகன்!


60 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் குப்பையிலிருந்து ஒரு  ஓவியத்தை எடுத்திருக்கிறார். தற்போது அந்த ஓவியத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் என்பது மகனுக்கு தெரியவந்துள்ளது.

சிலருக்கு பழைய பொருட்களை குறிப்பாக கலைப் பொருட்களை சேகரிப்பதில் மிகவும் விருப்பம் இருக்கும். அந்தவகையில் இத்தாலியில் 1962ம் ஆண்டு பழைய பொருட்களை சேகரிக்கும் தொழிலாளியான லுங்கி லோ ரோஸா குப்பையிலிருந்து ஒரு ஓவியத்தை எடுத்திருக்கிறார்.

அதனை தனது வீட்டுக்கு எடுத்து வந்து சுவற்றில் மாட்டியிருக்கிறார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இந்த ஓவியம் ஒரு சாதாராண ஓவியமாக சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஓவியம் பிரபல ஓவியரான பிக்காசோவின் ஓவியம் என அவரது மகன் கண்டுபிடித்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்புதான் அவர்களின் வாழ்க்கையையே திருப்பிப் போட்டுள்ளது. ஓவியத்தை எடுத்தவருக்கு பிக்காசோ யார் என்று தெரியாததால் இதன் மதிப்பு தெரியவில்லை. ஆனால், இவரது மகன் இந்த ஓவியத்தை பரிசோதனை செய்து இந்த உண்மையை கண்டறிந்துள்ளார். அந்த ஓவியத்தில் இருந்த கையெழுத்து பிக்காசோவுடையது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த ஓவியத்தின் மதிப்பு சுமார் 60 கோடி என்பது உறுதியானது.

இதில் இருந்த படமானது பிக்காசோவின் நண்பரான பிரெஞ்சு புகைப்படக் கலைஞரும் கவிஞருமான டோரா மாரின் சிதைந்த படம் என்று நம்பப்படுகிறது.

குப்பையிலிருந்து எடுத்தவர் இந்த ஓவியத்தை தனது மனைவிக்கு பரிசாக அளித்திருக்கிறார். அவரது மனைவியும் இந்த ஓவியம் விற்கும் அளவிற்கு மதிப்பு இல்லை என்பதை அறிந்து பத்திரமாக தனது வீட்டிலேயே வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர்களின் மகன் கூறியதாவது, “அம்மா வீட்டை அலங்கரிப்பதற்காக அதை சுவரில் தொங்கவிட்டபோது, ​​அந்த பெண்ணின் முகத்தில் உள்ள விசித்திரம் காரணமாக அதை ‘ஸ்கிரிப்பிள்’ என்று மறுபெயரிட்டார்.” என்று பேசினார்.

இந்த ஓவியம் சந்தேகத்தின் அடிப்படையில் 2019ம் ஆண்டு முதல் மிலனில் உள்ள பெட்டகத்தில் பூட்டிவைக்கப்பட்டது. இதனையடுத்து சென்ற மாதம் மிலனில் உள்ள தேசபக்தி நீதிமன்றத்தின் வரைபடவியலாளரான சின்சியா அல்டீரி, பிக்காசோ கையொப்பம் உண்மையானது என்று சான்றதல் அழிக்கப்பட்டது. இந்த ஓவியத்தின் மதிப்பு சுமார் 6 மில்லியன் பவுண்டுகள் (ரூ. 66.70 கோடி) இருக்கும்.

kalkionline



 



Post a Comment

0 Comments