Ticker

6/recent/ticker-posts

Ad Code



மிக எளிமையாக பாராளுமன்றம் வந்த ஜனாதிபதியும்,பிரதமரும்!


மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, ஆர்ப்பாட்டம் நடத்தாமல் தேசிய சபைக்கு விஜயம் செய்து சர்வதேசம் உட்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இந்தநிலையில், படைகள சேவிதர், பிரதி படைகள சேவிதர் மற்றும் உதவி படைகள சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயக்கர் மற்றும் செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி நாடாளுமன்ற கட்டடத்திற்குள் அழைத்து வரப்பட்டார்.

அத்தோடு,  பிரதமர் ஹரிணி அமரசூரியவும் எவ்வித ஆடம்பர வரவேற்புகளுமின்றி அவைக்குள் அழைத்து வரப்பட்டுள்ளார்.
சபாநாயகர் அசோக ரங்வல்ல மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரால் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) வரவேற்கப்பட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் எவ்வித வாகன பவணியும் இன்றி, மரியாதை அணிவகுப்புக்கள் எதுவுமின்றி மிக எளிமையான முறையில் ஜனாதிபதியும்,பிரதமரும் அவைக்குள் வரவேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




 Ai SONGS

 



Post a Comment

0 Comments