Ticker

6/recent/ticker-posts

Ad Code



பணய கைதிகளை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.40 கோடி சன்மானம்! - இஸ்ரேல் பிரதமர் அதிரடி அறிவிப்பு!


ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்ற இஸ்ரேல் பணய கைதிகளை கண்டுபிடித்து கொடுத்தால் சன்மானம் வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தி 1,139 இஸ்ரேலிய மக்களை கொன்றதுடன், 251 பேரை பணய கைதியாக பிடித்துச் சென்றது. அதன் பின்னர் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து வந்த நிலையில், இடையே நடந்த தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 117 பணய கைதிகளை ஹமாஸ் இஸ்ரேலிடம் ஒப்படைத்தது.
 
மேலும் ஹமாஸ் அமைப்பால் கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், ஹமாஸிடம் இன்னும் 101 இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதில் சிலர் இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

பதிலடியாக காசாவை தொடர்ந்து இஸ்ரேல் தாக்கிவரும் நிலையில் இதுவரை 43 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளனர். சமீபத்தில் காசாவை பார்வையிட சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, காசாவில் ஹமாஸிடம் பணய கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும். பணய கைதிகளை கண்டுபிடித்து ஒப்படைத்தால் ஒரு பணய கைதிக்கு தலா 5 மில்லியன் டாலர்கள் (42 கோடி ரூபாய்) என எத்தனை பணய கைதிகளை கண்டுபிடித்து தருகிறார்களோ அதற்கேற்ப சன்மானம் அதிகமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
 
மேலும், பணய கைதிகளை மீட்கும்வரை போர் தொடரும் எனவும், யாரேனும் பணய கைதிகளுக்கு தீங்க விளைவிக்க நினைத்தால் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று நேதன்யாகு எச்சரித்துள்ளார்.

webdunia



 Ai SONGS

 



Post a Comment

0 Comments