Ticker

6/recent/ticker-posts

'பேய்' வீடுகளை விற்கும் முகவர்கள்


புதிய வீடு வாங்கும்போது..சுற்று வட்டாரம் எப்படி உள்ளது..அண்டை வீட்டார் யார்...அங்கு முன்பு தங்கியவர்கள் யார்...என்று நம்மில் பலர் விசாரிப்பதுண்டு.

ஆனால் சிலர் இதையும் கேட்பார்கள்..."இங்கு யாராவது இறந்திருக்கீறார்களா?" "இங்கு கொலை அல்லது வேறு குற்றம் நேர்ந்துள்ளதா?"

உண்மையில் அவற்றால் 'பேய்' வீடுகளை விற்பதில் பல சிரமங்கள் உள்ளதாக வீட்டு முகவர்கள் The New York Times செய்தி நிறுவனத்திடம் கூறினர்.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் (Massachusetts), மினசோட்டா (Minnesota), நியூ ஜெர்சி (New Jersey), நியூயார்க் (New York) ஆகிய மாநிலங்களில் முகவர்கள் எது 'பேய்' வீடு என்பதை வாடிக்கையாளர்களிடம் முன்கூட்டியே கூறுவது கட்டாயம்.

அவ்வாறு செய்யும்போது அறையில் 'வேறு என்னவோ இருப்பதைப் போல் உள்ளது' என்று கூறி வாடிக்கையாளர்கள் வீட்டை நிராகரிப்பதுண்டு என்று முகவர்கள் சிலர் கூறினர்.

"வீட்டில் ஒரு பொருளோ சுவரின் நிறமோ பிடிக்கவில்லை என்றால் அதை எளிதில் மாற்றிவிடலாம். 'பேய் இருக்கிறது' என்று சொன்னால் என்ன செய்யமுடியும்?" என்று முகவர் மைக் ஃபப்ரி சொன்னார்.

பேய் உண்மையில் உள்ளதா என்ற கேள்விக்குப் பதில் இல்லை என்றாலும் வாடிக்கையாளர்களின் கதைகள் பேய்களை மறுக்கமுடியாமல் செய்வதாக முகவர்கள் சிலர் கூறினர்.

ஒரே வீட்டில் குடியிருப்பாளர்கள் மாறிமாறி வசித்தாலும் அனைவரும் ஒரே விதமான 'பேய்க்' கதையைக் கூறியதுண்டு என்று அவர்கள் தெரிவித்தனர்.

அத்தகைய வீடுகளுக்கு வேறு வழியில்லாமல் 'பேய் ஓட்டும் நிபுணர்களை' முகவர்கள் சிலர் அழைப்பதாக New York Times செய்தி நிறுவனம் சொன்னது.

அப்படியாவது வீட்டில் யாராவது தங்குவார்கள் என்பது முகவர்களின் நம்பிக்கை.

seithi



 Ai SONGS

 



Post a Comment

0 Comments