Ticker

6/recent/ticker-posts

219 ரன்ஸ்.. தெ.ஆ அணியை விளாசிய அபிஷேக்.. சுரேஷ் ரெய்னாவை முந்தி திலக் வர்மா 14 வருட புதிய சாதனை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வெற்றியை பெற்ற இந்தியா இரண்டாவது போட்டியில் தோற்றது. அந்த நிலையில் மூன்றாவது போட்டி நவம்பர் 13ஆம் தேதி தென்னாபிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்கியது. 

அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மீண்டும் டக் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா போட்டியில் அதிரடியாக விளையாடினார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த திலக் வர்மா தம்முடைய பங்கிற்கு அதிரடியாக ரன்கள் குவித்தார்.

அந்த வகையில் பவர் பிளே தாண்டி அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு அற்புதமான துவக்கத்தை கொடுத்தது. அதில் அபிஷேக் ஷர்மா 3 பவுண்டரி 5 சிக்ஸருடன் 50 (25) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்ததாக வந்த கேப்டன் சூரியகுமார் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். 

இருப்பினும் மறுபுறம் திலக் வர்மா அரை சதமடித்து தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். எதிர்புறம் தடுமாறிய ஹர்திக் பாண்டியா 18, ரிங்கு சிங் 8 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய திலக் வர்மா சதமடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 8 பவுண்டரி 7 சிக்ஸருடன் 107* (56) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

அவருடன் ரமந்திப் சிங் 15* (6) ரன்கள் 20 ஓவரில் இந்தியா 219-6 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் மற்றும் ஆண்டிலே சிம்லேன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். முன்னதாக 22 வருடம் 5 நாட்கள் வயதில் இப்போட்டியில் திலக் வர்மா சதம் அடித்தார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இளம் வயதில் சதமடித்த இந்திய வீரர் என்ற ரெய்னாவின் சாதனையை உடைத்து அவர் புதிய சாதனை படைத்தார்.

இதற்கு முன் 2010 டி20 உலகக் கோப்பையின் போது சுரேஷ் ரெய்னா 23 வருடம் 156 நாட்கள் வயதில் சதம் அடித்ததே முந்தைய சாதனை. அந்த வகையில் இந்தியாவுக்கு மற்றும் ஒரு இளம் வீரர் கிடைத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதை தொடர்ந்து 220 ரன்கள் கட்டுப்படுத்தி வெல்லும் முனைப்புடன் இந்தியா பந்த வீசி வருகிறது.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments