"ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் படுகொலையானது பாலஸ்தீனிய போராளிகளை ஒருபோதும் பலவீனப்படுத்தாது ."என்று ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளார்கள்.
இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவம் கடந்த வியாழனன்று காசா பகுதியின் தெற்கு நகரமான ரஃபாவில் சின்வாரைக் கொன்றதாக அறிவித்தது.
அவரது படுகொலை இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்றும் தவறுதலாக நடந்த சம்பவம் என்றும் இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் ரஃபாவில் ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடம் நோக்கி பாய்ந்து சென்ற மூன்று ஹமாஸ் போராளிகளை படைகள் அடையாளம் கண்டு தாக்குதல் நடத்தும் போது சின்வார் கொல்லப்பட்டுள்ளார் என்று இஸ்ரேல் பயங்கரவாத இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.
ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி மேலும் கூறுகையில், "துருப்புக்கள் ஒரு கட்டிடத்திற்குள் ஓடுவதற்கு முன்பு அவர்களை சுட முயன்றனர்."
ஒரு அறையில் சின்வாரின் இறுதி தருணங்கள் என்று சில ட்ரோன் காட்சிகளை இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டது.
ஷெல் தாக்குதலால் சிதறிய சுவர்களுடன் அவர் அங்கு தனியாக இருப்பதை வீடியோ காட்டுகிறது. அவரது வலது கையில் பலத்த காயத்துடன் காணப்பட்ட வீடியோவில், ஹமாஸ் தலைவர் தனது தலைக்கு மேல் ஒரு குச்சியை ட்ரோன் வரும் திசையில் வீசுவதைக் காட்டுகிறது.
பின்னர் இஸ்ரேலிய இராணுவம் கட்டிடத்தின் மீது கூடுதல் ஷெல் வீசியது, இதனால் அது சரிந்து சின்வார் கொல்லப்பட்டதாக ஹகாரி கூறினார்.
ட்ரோன் காட்சிகள் எடுக்கப்பட்டபோது சின்வார் ஒரு போராளியாக மட்டுமே அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கொல்லப்பட்டவர் ஹமாஸ் தலைவர் என்று இஸ்ரேல் பின்னர் அறிவித்தது!
காசாவில் இஸ்ரேலியப் படைகளுடனான போரில் சின்வார் கொல்லப்பட்டதை ஹமாஸ் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது, "அவர் தனது வாழ்நாளின் கடைசி தருணங்கள்வரை பாலஸ்தீன விடுதலைக்காக முன்னின்று போராடியவர்.தைரியமாக இஸ்ரேலிய பயங்கரவாதிகளை நேருக்கு நேர் எதிர்கொண்டவர்.அந்தத் தியாகியின் நோக்கங்கள் நிறைவேறும்வரை ஹமாஸ் போராளிகள் ஓயப்போவதில்லை."என்று ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளார்கள்.
சின்வார் படுகொலை ஹமாஸின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற மாயையில் இஸ்ரேல் கனவு காண்கிறது.
ஹமாஸ் என்பது வெறும் சின்வார் என்ற தனி நபரை சார்ந்தது அல்ல
ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கிய காசா போர் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.உலக வல்லரசுகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஹமாஸ் போராளிகளை ஒழித்துக்கட்ட நினைத்தாலும்,சியோனிச ஆட்சியாளர்களால் போராளிகளை எதுவும் செய்ய முடியாமல் மீண்டும் மீண்டும் பின்னடைவையே சந்திக்கின்றார்கள்.
அதற்குக் காரணம் ஹமாஸ் போராளிகளின் தலைமைகளின் நேர்த்தியான திட்டங்களும்,கடுமையான பயிற்சிகளும்தான்.
இந்தப் போர் சின்வார், ஹனியே அல்லது மிஷால் அல்லது எந்தத் தலைவரையோ அதிகாரியையோ சார்ந்தது அல்ல, இது பாலத்தீன மக்களுக்கு எதிரான அழிவுகரமானப் போர். இது உலகம் அறிந்து கொண்ட உண்மை. சின்வார் உள்ளிட்டவர்களை தாண்டி இது மிகப்பெரிய பிரச்னை.பாலஸ்தீன மக்களின் விடுதலைப்போராட்டம் என்பதை இஸ்ரேலிய பயங்கரவாதிகளும் ,அவர்களை ஆதரிக்கும் வல்லரசு நாடுகளும் புரிந்துகொள்ளவேண்டும்.
ஹமாஸ் போராளிகள் அனைவரும் தலைமையை எடுத்து நடாத்த தகுதியானவர்கள்தான்.தனிப்பட்ட ஒருவரையும் சார்ந்து போராடும் இயக்கமல்ல.ஏனென்றால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பயிற்ச்சிகள் அப்படிப்பட்டது.
1990களில் இருந்து ஒவ்வொரு ஹமாஸ் தலைவர்களும் இஸ்ரேலால் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால் அடுத்தடுத்து ஒரு தலைமை வந்து விடுகின்றார்கள்.
ஹமாஸ் போராளிகளை ஒருபோதும் அழிக்க முடியாது.இஸ்ரேலின் கொடூர தாக்குதலால் போராளிகள் மீண்டும்,மீண்டும் எழுச்சிபெருவார்கள்.
பாலஸ்தீனியர்கள் சின்வாரையும்.ஏனைய தலைவர்களையும் இறுதிவரை போராடும் போராளியாகவே கருதுகின்றனர். அவர்களுடைய அசாத்திய தைரியத்தையும், தன்னலமற்ற தன்மையையும் போற்றுகிறார்கள்.
பலஸ்தீன மக்களின் விடுதலை போராட்டமானது தொடரும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
மாஸ்டர்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments