Ticker

6/recent/ticker-posts

இந்தோனேசியாவில் iPhone 16 தடை

இந்தோனேசியாவில் iPhone 16 கைத்தொலைபேசிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

Apple நிறுவனம் முதலீட்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று அந்நாட்டு வர்த்தக அமைச்சர் அகுஸ் குமிவாங் கர்டாசாஸ்மிடா (Agus Gumiwang Kartasasmita) கூறினார்.

இந்தோனேசியாவில் Apple நிறுவனம் 1.71 டிரில்லியன் ரூபியா (144.6 மில்லியன் வெள்ளி) முதலீடு செய்யவதாகக் கூறியிருந்ததாக The Jakarta Post செய்தி நிறுவனம் சொன்னது.

முதலீட்டில் ஒரு பகுதி மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அது கூறியது.

இந்நிலையில் இந்தோனேசியாவுக்குள் iPhone 16 கைத்தொலைபேசியைக் கொண்டுவரப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று Jakarta Globe செய்தி நிறுவனம் சொன்னது.

ஒருவர் அதிகபட்சம் இரண்டு கைத்தொலைபேசிகளை வைத்திருக்கமுடியும்...அவற்றைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தமுடியும் என்று கூறப்பட்டது.

கைத்தொலைபேசிகளை மற்றவர்களுக்கு விற்கக்கூடாது என்று தெரிவிக்கப்படது.

seithi



 Ai SONGS

 



Post a Comment

0 Comments