மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து 78,000 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகின்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 454 புள்ளிகளுக்கும் மேல் குறைந்து 23850 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.
இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ, எச்டிஎப்சி,சன் பார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பெரியளவில் வீழ்ந்தன. வங்கிகள், ஆட்டோமொபைல், நிதித்துறை, ஐ.டி, உலோகத்துறை பங்குகளில் அரை விழுக்காடு அளவுக்கு சரிவு காணப்பட்டது. பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு 8 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல், நிறுவனங்களின் மோசமான இரண்டாம் காலாண்டு முடிவுகள் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறைப்பு அச்சம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட 4 முக்கிய காரணிகள் பங்குச்சந்தைகளில் பெரிய சரிவுக்கு காரணமாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்