நமது உடல் இந்த மாதிரியான மோசமான தூங்கும் நிலையில் மாட்டிக் கொண்டிருப்பதை அறிவுறுத்தும் சில பொதுவான தூங்கும் நிலைகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
கருவறையில் இருப்பது போன்ற நிலை : கால்களை வளைத்து முட்டியானது நெஞ்சை நோக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலை. இது சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். மேலும் கழுத்து மற்றும் முதுகில் அதிக அழுத்தத்தை கொடுக்கும்.
குப்புற படுத்து உறங்குவது : முகத்தை தரையில் வைத்து படுப்பது மற்றும் கீழ் முதுகில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த நிலையில் உங்களுடைய தலை சுவாசிப்பதற்காக ஒருபுறமாக திரும்ப வேண்டியிருக்கும்.
ஸ்டார்ஃபிஷ் நிலை : தரையில் நேராகப்படுத்து கைகள் இரண்டையும் தலைக்கு மேல் வைத்து படுத்திருப்பது தோள்பட்டைகளில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அது மட்டுமல்லாமல் இந்த நிலை ஒரு சில நபர்களில் குறட்டை அல்லது ஸ்லீப் ஆப்னியா போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
யெர்னர் நிலை (Yearner position) : இந்த நிலையில் ஒருக்களித்து படித்துக்கொண்டு இரண்டு கைகளையும் முன்னோக்கி நீட்டி வைத்திருப்பது தோள்பட்டைகள் மற்றும் கழுத்தில் அழுத்தத்தை கொடுக்கும். அதிலும் குறிப்பாக இந்த நிலையை ஆதரவு தரும் வகையில் உங்களுடைய படுக்கை இல்லாவிட்டால் இது மோசமான உடல் வலியை ஏற்படுத்தலாம்.
இதற்கு பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன?
நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருப்பது அல்லது போதுமான அளவு உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் தூங்கும் பொழுது நம்முடைய உடலுக்கு ஓய்வு பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. படுத்து உறங்கும் மெத்தை அதிக இறுக்கமாக இருந்தாலோ அல்லது அளவுக்கு அதிகமாக மென்மையாக இருந்தாலோ, போதுமான தலையணை இல்லாமல் இருத்தல் அல்லது சௌகரியம் இல்லாத ஒரு அறை வெப்பநிலை போன்றவை மோசமான தூக்க நிலைக்கு காரணமாகலாம்.
அதுமட்டுமல்லாமல் ஆர்தரைட்டிஸ், ஃபைப்ரோ மையால்ஜியா அல்லது நாள்பட்ட வலி போன்றவை தூங்கும் நிலைகளில் அசௌகரியத்தை ஏற்படுத்தி உடலுக்கு ஓய்வு கிடைப்பதை தடுக்கும். பதட்டம், மன அழுத்தம் அல்லது மனசோர்வு போன்றவையும் தசை பதற்றத்தை ஏற்படுத்தி தூங்குவதற்கு சௌகரியமான ஒரு நிலையை கண்டுபிடிப்பதில் சிரமத்தை உண்டாக்கும். ஆனால் இயற்கையான தூங்கும் நிலைகளை பற்றிய விழிப்புணர்வு பலருக்கு இருப்பதில்லை. எப்படி வேண்டுமானாலும் தூங்கலாம் என்ற மனப்போக்கை கொண்டுள்ளனர்.
நல்ல தூக்கத்திற்கு உங்களுடைய உடலை எப்படி ஓய்வு நிலைக்கு கொண்டு செல்வது?
தூங்குவதற்கு முன்பு ஆழ்ந்த மூச்சு பயிற்சிகளை செய்வது மனதை அமைதிப்படுத்தி உடலுக்கு ஓய்வளிக்கும். மேலும் இது தசை பதற்றத்தை குறைத்து உங்களை தூங்குவதற்கு தயார் செய்யும். மென்மையான நீட்சி பயிற்சிகள் அல்லது யோகாசனங்கள் அதிலும் குறிப்பாக உங்களுடைய முதுகு கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் கவனம் செலுத்தும் தோரணைகளை செய்வது தசை பதற்றத்தை விடுவித்து நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தும்.
நீங்கள் படுத்து உறங்கும் படுக்கை மற்றும் தலையணை உங்களுக்கு சௌகரியமாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் அறை வெப்பநிலை ஓய்வளிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். காபின், நிக்கோட்டின் மற்றும் மதுபானங்கள் ஆகியவற்றை படுக்கைக்கு செல்லும் சமயத்தில் பயன்படுத்த வேண்டாம். இது உங்களுடைய தூக்கத்தை சீர்குலைத்து, உடலுக்கு ஓய்வு கிடைப்பதை தடுக்கும்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments