Ticker

6/recent/ticker-posts

Ad Code



காசாவின் சுகாதார அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் 'வேண்டுமென்றே போர்க்குற்றம்' செய்ததாக ஐ.நா அறிவிப்பு!

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி மீதான ஐ.நா விசாரணைக் குழுவின் உறுப்பினரான நவி பிள்ளை, காசாவின் சுகாதார அமைப்பை அழிக்க இஸ்ரேல் ஒரு "ஒருங்கிணைந்த கொள்கையை" மேற்கொள்வதாக  விசாரணையில் கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார்..

"இந்த விசாரணை சமூக ஊடகங்களில் நாம் பார்ப்பதை மட்டும் தெரிவிக்கவில்லை, ஆனால் மருத்துவமனைகளின் அழிவு, மருத்துவர்களை வேண்டுமென்றே குறிவைத்தல் பற்றிய மிகக் கவனமாக உண்மை சரிபார்க்கப்பட்ட பின்னரேநாம் தெரிவிக்கின்றோம் " என்று பிள்ளை தெரிவித்துள்ளார்.

"இது ஐக்கிய நாடுகள் சபையின் முதல் அறிக்கையாகும் ... சுகாதாரப் பணியாளர்களை வேண்டுமென்றே குறிவைப்பது, ஒரு திட்டமிட்ட , போர்க் குற்றம்."

"புலனாய்வாளர்களுக்கு அனுமதி மறுத்து  இஸ்ரேல் தனது கொடிய தாக்குதல்களை நடாத்தும்போது  விசாரிப்பது கடினமாக இருக்கின்றது."என்றும், பிலே தெரிவித்துள்ளார்..



 Ai SONGS

 



Post a Comment

0 Comments