
ரஞ்சிக் கோப்பையில் 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மத்திய பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் மோதிய போட்டி நவம்பர் 13ஆம் தேதி துவங்கியது. இந்தூரில் துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களம் இறங்கிய பெங்கால் அணி 228 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக சபாஷ் அகமது 92, கேப்டன் மஜும்தார் 43 ரன்கள் எடுத்த நிலையில் மத்திய பிரதேசம் ஆரியன் பாண்டே 4, கெஜ்ராலியா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய மத்திய பிரதேச அணியை அபாரமாக பந்து வீசிய பெங்கால் 167 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அதிகபட்சமாக சேனாதிபதி 47, ரஜத் படிதார் 41 ரன்கள் எடுத்தனர்.
பெங்கால் அணிக்கு காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய முகமது ஷமி 19 ஓவரில் 54 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்து கம்பேக் கொடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய பெங்கால் அணி 276 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக சுதீப் கராமி 40, சுதீப் சேட்டர்ஜி 40, ரித்திக் சேட்டர்ஜி 44 ரன்களை எடுத்தனர்.
அதே போல 10வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய ஷமி 2 பவுண்டரி 2 சிக்சருடன் 37 (36) ரன்கள் விளாசி பேட்டிங்கிலும் அற்புதமான கம்பேக் கொடுத்தார். மத்திய பிரதேச அணிக்கு அதிகபட்சமாக அனுபவ், அகர்வால் குமார் கார்த்திகேயா தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். இறுதியில் 338 ரன்களை துரத்திய மத்திய பிரதேச அணிக்கு சேனாதிபதி 50, ஹிமான்சு மந்திரி 44 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.
மிடில் ஆர்டரில் ரஜத் படிடார் 31, கேப்டன் சுபம் சர்மா 61, வெங்கடேஷ் ஐயர் 53, சரன்ஸ் ஜெயின் 32 ரன்கள் குவித்து போராடினார்கள். இருப்பினும் சிறப்பாக பந்து வீசிய பெங்கால் 326 ரன்களுக்கு ஒரு மத்திய பிரதேசத்தை சுருட்டி 11 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பெங்கால் அணிக்கு அதிகபட்சமாக சபாஷ் அகமது 4, முகமது ஷமி 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
அந்த வகையில் இப்போட்டியில் மொத்தம் 7 விக்கெட்டுகளை எடுத்த ஷமி 37 ரன்களும் எடுத்து அபார கம்பேக் கொடுத்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ரஞ்சிக் கோப்பையில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பெங்கால் அணிக்காக என்ன ஒரு த்ரில்லர் வெற்றி. ஒவ்வொரு விக்கெட்டும், ஒவ்வொரு ரன்னும் என்னுடைய அற்புதமான ரசிகர்களான உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். உங்களுடைய அன்பு ஒவ்வொரு முறையும் என்னுடைய சிறந்த செல்வதை கொடுக்க உதவுகிறது” என்று கூறியுள்ளார்.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments