Ticker

6/recent/ticker-posts

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மொத்த செலவுகள் 110 கோடி ரூபா!


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வருடாந்த ஒதுக்கீட்டின் பெரும்பகுதியை அவர்களின்  பாதுகாப்புச் செலவுகளுக்காகவே செலவிட்டதாக தெரியவந்துள்ளது.

​​முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 110 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், அதில் மஹிந்தவுக்கு மட்டும் 32 கோடி (65 இலட்சத்து 82,000) செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஆர். பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோருக்கு வருடாந்தம் 110 மில்லியன் ரூபாவை பாதுகாப்புக்காக வழங்கியுள்ளதகவும் தெரிவிக்கப்படுகின்றது..

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளின் வருடாந்திர பாதுகாப்பு செலவுகள் பற்றிய முழு விபரம் வெளியாகியுள்ளது:
  • மகிந்த ராஜபக்ச 32 கோடி 65 லட்சத்து 8271 ஆயிரத்து 819 ரூபாய்,
  • ரணில் விக்கிரமசிங்க 25 கோடி 33 லட்சத்து 95 ஆயிரத்து 249 ரூபாய்
  • மைத்திரிபால சிறிசேன 18 கோடி 51 லட்சத்து 66 ஆயிரத்து 535 ரூபாய்,
  • சந்திரிகா குமாரதுங்க 9 கோடி 88 லட்சத்து 71ஆயிரத்து 866 ரூபாய்,
  • கோட்டாபய ராஜபக்ஷ 3 கோடி 91 லட்சத்து 41 ஆயிரத்து 488 ரூபாய்,
  • ஹேமா பிரேமதாச 2 கோடி 98 லட்சத்து 78 ஆயிரத்து 008 ரூபாய்,
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாவலர்களுக்கான மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், உணவு மற்றும் குடிநீர், தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் என மொத்த செலவுகள் 110 கோடி ரூபாயை தாண்டுவதாக தெரியவந்துள்ளது.



 Ai SONGS

 



Post a Comment

0 Comments