Ticker

6/recent/ticker-posts

Ad Code



13 வயது சாதனை வீரர் 1.10 கோடிக்கு வாங்கப்பட்டது எப்படி? முஷீர் கானுக்கு வாய்ப்பு.. சர்பராஸ்க்கு ஏமாற்றம்


ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. அதில் நட்சத்திர வீரர்களை வாங்குவதற்கு பல்வேறு அணிகள் போட்டியிட்டன. அந்த ஏலத்தில் வெறும் 13 வயதாகும் இளம் வீரர் சூரியவன்சி 1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். அவரை வாங்குவதற்காக ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் போட்டியிட்டன.

ஏனெனில் கடந்த மாதம் சென்னையில் ஆஸ்திரேலியா அண்டர்-19 அணிக்கு எதிராக அவர் இந்தியா அண்டர்-19 அணிக்காக அதிரடியாக விளையாடினார். அந்த டெஸ்ட் போட்டியில் வெறும் 58 பந்துகளில் அவர் அதிரடியான சதத்தை அடித்தார். அதன் வாயிலாக அண்டர்-19 டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமான சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

அந்தப் போட்டியில் அவர் 14 பவுண்டரி மற்றும் 4 சிக்சருடன் சதத்தை அடித்தார். மேலும் கடந்த ஜனவரி மாதம் ரஞ்சிக் கோப்பையில் இளம் வயதில் அறிமுகமான இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் சாதனைகளையும் அவர் உடைத்திருந்தார். அதன் காரணமாக திறமையாக செயல்படும் அவரை ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது. அந்த வகையில் 13 வயதிலேயே திறமையால் முன்னேறியுள்ள சூரியவன்சிக்கு ரசிகர்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கிறார்கள்.

அதே போல மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் முஷீர் கான் கடந்த அண்டர்-19 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக ரஞ்சிக் கோப்பையில் மும்பைக்காக அறிமுகமான அவர் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அந்த வகையில் சமீப காலங்களில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.

அதன் காரணமாக அவரை பஞ்சாப் அணி 30 லட்சத்திற்கு வாங்கியது. மறுபுறம் அவருடைய அண்ணனான சர்பராஸ் கான் கடந்த காலங்களில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி, டெல்லி அணிகளுக்காக விளையாடியுள்ளார். இருப்பினும் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய அவர் சமீபத்தில் இந்திய அணிக்காகவும் அறிமுகமாகி சதத்தை அடித்தார்.

அதன் காரணமாக இம்முறை அவரை ஏதேனும் ஐபிஎல் அணி வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவரை 2025 ஐபிஎல் தொடருக்காக எந்த அணியும் வாங்கு ஆர்வம் காட்டவில்லை. அந்த வகையில் தம்பி முஷீர் வாய்ப்பு பெற்ற நிலையில் அண்ணன் சர்பராஸ் ஏமாற்றத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments