இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக் குழுவுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு எட்டப்படும் அறிகுறி தெரிகிறது.
சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு இஸ்ரேலும் லெபனானும் இணங்கியிருப்பதாக அமெரிக்காவின் Axios செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அது அவ்வாறு சொன்னது.
இணக்கம் எட்டுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கத் தேசியப் பாதுகாப்புப் பேச்சாளர் ஜான் கெர்பியும் (John Kirby) சொன்னார். எனினும் அனைத்தும் உறுதியாகும் வரை ஒன்றும் சொல்லமுடியாது என்றார் அவர்.
இஸ்ரேலின் பாதுகாப்பு ஆலோசகர்கள் இன்று (26 நவம்பர்) இணக்க ஒப்பந்தத்தைப் பற்றி முடிவெடுக்கவுள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் சொன்னார்.
தற்போதுள்ள சூழலை மாற்ற 2 மாத அவகாசம் அளிப்பது முதலிய அம்சங்கள் வரைவு உடன்பாட்டில் உள்ளதாகத் தெரிகிறது. தென் லெபனானிலிருந்து இஸ்ரேலியத் துருப்பினரை மீட்டுக்கொள்ள அது வழியமைக்கும்.
எல்லையையொட்டி லெபனான் ராணுவம் நிறுத்தப்படும் என்றும் வடக்கே லித்தானி (Litani) ஆற்றுப் பகுதிக்கு ஹிஸ்புல்லா கனரக ஆயுதங்களைக் கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சண்டை நிறுத்தப்படுவதற்கான அறிகுறி இருந்தாலும் வாரயிறுதியில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்தன.
லெபனான் தலைநகர் பெய்ரூட் (Beirut) மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 29 பேர் மாண்டனர்.
ஹிஸ்புல்லா 250 ஏவுகணைகளை இஸ்ரேலுக்குள் பாய்ச்சியது.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments