Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரும் வாழும் குறளும் (பன்முக ஆய்வு)-14


பாண்டிய வேந்தனும், வள்ளுவரின் வருகையை அறிந்து மிகவும் மகிழ்ச்சியுற்று. எல்லாச் சிறப்புகளோடும். நற்புலவர்களோடும் சென்று, அவரை எதிர் கொண்டழைத்து வந்து, புலவர் பெருமக்கள் வீற்றிருக்கின்ற சபையிலே அமர வைத்தான்.

விண்மீன்களுக்கு நடுவில் நல்லதொரு நிலவு போல அமர்ந்திருந்த வள்ளுவரை, அங்கு அமர்ந்திருந்த புலவர்களெல்லாம் பெருமிதத்தோடு பார்த்தனர். பின், உக்கிரப் பெருவழுதி, ஆசிரியர் திருவள்ளுவரை உயர்ந்த பீடமானதொரு பலகையில் அமரச்செய்தார். அங்குள்ள புலவர்களெல்லாம், வள்ளுவரின் கண்களிலே தெரிந்த பார்வையால் அவரது வல்லமை அறிந்து, அவருக்கு சரி சமமாக அமர்தலை மறுத்து, கீழிறங்கி அமரலாயினர்.

பாண்டிய வேந்தன் உக்கிரப் பெருவழுதி. "அறிவொளி மிக்க வள்ளுவரின் உடன் இருந்து, அவர் அருளும் உரைக் கேட்பதற்கு உரியர் யார்? !" என்று வினவினார்.

உடனே அங்கிருந்த புலவர்களெல்லாம். "இறையனாரகப் பொருளுக்கு நக்கீரவார் உரைத்த உரையே உண்மை உரை என்று தெளிவித்த உப்பூரி குடிகிழார் மகனாவானார் உருத்திரசன்மரே... ஆசிரியர் திருவள்ளுவரின் திருக்குறளை உடனிருந்து கேட்க வல்லவர்!" என்று ஒருமுகமாக உரத்துக் கூறினர். அதன்படி, பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, புலவர் உருத்திரசன்மரை அழைத்து, வள்ளுவரின் முன் அமரச்செய்து, அவர் அருளும் திருக்குறளைக் கேட்கச் செய்தார். அவரும், "அகர முதல....." எனத் தொடங்கி, அறிவொளியைத் தனது திருக்குறளின் வாயிலாக ஒளிரவிட்டார்.

திருக்குறளைக் கேட்டுக் கொண்டிருந்த பாண்டிய வேந்தன் உக்கிரப் பெருவழுதி, கபிலர், ஔவையார், பரணர், உருத்திரசன்மர் மற்றும் அங்குள்ள எல்லாப் புலவர்களும், சொல்லொண்ணா மகிழ்ச்சி எய்தினர். வள்ளுவரைப் பாராட்ட அனைவரும் ஆர்த் தெழுந்தனர். இஃதொப்பதோர் நூலும், இவரை ஒப்பதோர் ஆசிரியருங் கண்டிலேம் ! சுண்டி லேம்!!" என்று களிப்பால் ததும்பினர்.

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments