இதனைத் தொடர்ந்து இவற்றை பாதுகாக்க பாக்விரிகுடாவில் “கடற்பசு பாதுகாப்பகம்” அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் அழிந்துவரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மன்னார்வளைகுடா, பாக்விரிகுடா பகுதியில் “கடற்பசு பாதுகாப்பகம்“ அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இதனைத் செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர் மாவட்டம் மனோரா பகுதியில் 15கோடிரூபாய் செலவில் கடற்பசு பாதுகாப்பகமாக (Dugong Conservation Reserve) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் எந்த ஒரு புதிய கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ அங்கு வாழும் மீனவ மக்களுக்கு விதிக்கப்படாது. பாக்வளைகுடாவில், தமிழக அரசு அறிவித்துள்ள இந்தக் கடற்பசு பாதுகாப்பகம், இந்தியாவிலேயே முதன்முதலாக அமைக்கப்படும் பாதுகாப்பகம் எனும் பெருமையை பெற்றுள்ளது.
இம்மையம் அழிந்து வரும் கடற்பசுகளை பாதுகாக்க ஆராய்ச்சி,பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில கவனம் செலுத்தும்.
kalaignarseithigal
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments