Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-167


குறள் 498
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.

நமக்கு ஏத்ததா இருக்கக்கூடிய களத்துல இருந்து சந்திச்சா, கூட இருக்கது உதிரி கட்சிகளாக இருந்தாக்கூட, வலிமையான பெரிய கட்சியைக் கூட தோக்கடிச்சிறலாம். 

குறள் 507
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.

வேண்டியவன்ங்கிறதுக்காக, அறிவு இல்லாத முட்டாப் பயலை  பொறுப்புக்கு கொண்டாந்தா, அதுனால கெடுதல் தான் வரும். 

குறள் 513. 
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

அன்பா இருக்கவங்க, அறிவாளிங்க, தெறமையானவங்க, பணம் பணம்னு பேராசைப் படாதவங்க, இவங்களைத் தான் பொறுப்புக்குக் கொண்டு வரணும். 

குறள் 518
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.

ஒரு வேலையைச் செஞ்சு முடிக்க, சரிப்பட்டு வருவானா ங்கிறதை நல்ல தெரிஞ்ச பொறவு தான், ஒருத்தனை அந்த பொறுப்புல ஒக்கார வைக்கணும். 

குறள் 520
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு

வேலை செய்யுத தொழிலாளிங்க சங்கடப் படாம இருந்தா இந்த  ஒலகமும் நல்ல செழிப்பா இருக்கும். இதை ஆட்சியில இருக்கவொ புரிஞ்சுகிட்டு அதுக்கேத்த மாதிரி நடக்கணும். 

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments