Ticker

6/recent/ticker-posts

Ad Code



18,000 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருட்கள் பறிமுதல்!


இந்த வருடத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 18,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்புடன், 18,790 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பணிப்பாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 16ஆம் திகதி இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி படகில் 46 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளை கடற்படையினர் கண்டுபிடித்தனர்.

அந்த படகில் இருந்த 5 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நேற்று காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

குறித்த மீனவர்கள் 23 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்ட கந்தர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பல நாள் மீன்பிடி படகும் சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பணிப்பாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

adaderana




 Ai SONGS

 



Post a Comment

0 Comments