Ticker

6/recent/ticker-posts

Ad Code



அமெரிக்கா, நேட்டோவுடன் நேரடி மோதல் ஏற்படலாம் - ரஷ்யா எச்சரிக்கை


அமெரிக்கா நெடுந்தொலைவு ஏவுகணையைப் பயன்படுத்த உக்ரேனுக்கு அனுமதி அளித்திருப்பது, வாஷிங்டனையும் நேட்டோவையும் தன்னுடன் நேரடி மோதலில் இழுத்துவிடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

உக்ரேன் நெடுந்தொலைவு ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பாய்ச்ச அமெரிக்கா அனுமதித்திருக்கிறது; அது பொறுப்பற்ற செயல் என்று மாஸ்கோ கூறியது.

அமெரிக்க ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்தினால் உரிய, தெளிவான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்யா சொன்னது.

கர்ஸ்க் (Kursk) வட்டாரத்தில் சண்டையிட வட கொரியத் துருப்பினரைச் சேர்த்திருப்பதன் மூலம் ரஷ்யா போரைத் தீவிரப்படுத்துவதாக அமெரிக்கா சாடியது.

நெடுந்தொலைவு ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாட்டை அமெரிக்கா தளர்த்தியதை வரவேற்றிருக்கும் உக்ரேன், அது போரில் மாபெரும் மாற்றமாக இருக்கும் என்றது.

தொலைதூரம் தாக்க முடிவது போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரும் என்று கூறியது உக்ரேன்.

போலந்தும் அமெரிக்காவின் முடிவை வரவேற்றுள்ளது.

seithi



 Ai SONGS

 



Post a Comment

0 Comments