Ticker

6/recent/ticker-posts

Ad Code



சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரணில் தரப்பு தேசியப் பட்டியல் விவகாரம்! இறுதி தீர்மானத்திற்கு தயாராகும் கட்சி


தேசியப் பட்டியலின் ஊடாக ரவி கருணாநாயக்கவை நாடாளுமன்ற உறுப்பினராக்க எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது.  இந்த சர்ச்சை நிலை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும்  கலந்துரையாடலின் பின்னர்  இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரியாமலேயே ரவி கருணாநாயக்கவின் பெயர் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. சிலிண்டருக்கு உரித்தான அரசியல் கட்சியின் மூலமே அவரின் பெயர் வர்த்தமானியில் வெளியிட அனுப்பப்பட்டுள்ளதாகவே எமக்கு அறியக்கிடைத்திருக்கிறது.

புதிய ஜனநாயக கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் தலதா அத்துகோரல அல்லது சட்டத்தரணி ராேனால் பெரேராவை நியமிக்கவே கலந்துரையாடி இருந்தோம். இதுதொடர்பில் உறுதியான தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நடவடிக்கை ஐக்கிய தேசிய கட்சி யாப்பின் 3 3,4 உறுப்புரைகள், 9 7ஆம் உறுப்புரை, 13 7 மற்றும் 8ஆம் உறுப்புரைகளை மீறும் நடவடிக்கையாகும். எனவே இந்த பிரச்சினை தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுடன் இன்று கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்க இருக்கிறோம்.

என்றாலும் ரவி கருணாநாயக்கவின் இந்த நியமனம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் எமக்கு எதுவும் தெரியாது. தலதா அத்துகோரலவை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசிய கட்சி கலந்துரையாடி வந்தது. அது தொடர்பில் இன்று கலந்துரையாடி முடிவெடுப்பதற்கு இருந்த நிலையிலேயே இது நடைபெற்றுள்ளது.

என்றாலும் இந்த சர்ச்சை தொடர்பில் இன்று காலை ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனைத்து கட்சி பிரதானிகளுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

tamilwin



 Ai SONGS

 



Post a Comment

0 Comments