Ticker

6/recent/ticker-posts

Ad Code



201 ரன்ஸ்.. வேகத்துக்கு பயந்து வெளியேறிய வங்கதேச டெயில் எண்டர்கள்.. வெ.இ அபார வெற்றி


வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி ஆன்டிகுவா நகரில் நடைபெற்றது. நவம்பர் 22ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை அடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 450 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதிகபட்சமாக மைக் லூயிஸ் 97, அலிக் அதனேஷ் 90, ஜஸ்டின் க்ரீவ்ஸ் சதத்தை அடித்து 115*, கீமர் ரோச் 47 ரன்கள் எடுத்தார்கள். வங்கதேச அணிக்கு அதிகபட்சமாக ஹசன் முகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் விளையாடிய வங்கதேச அணி முடிந்தளவுக்கு முயற்சித்தும் 269-9 ரன்கள் எடுத்து தங்களுடைய ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. அதிகபட்சமாக மோனிமுள் ஹைக் 50, லிட்டன் தாஸ் 40, ஜாகிர் அலி 53 ரன்கள் குவித்தார்கள். கடைசி நேரத்தில் வங்கதேசத்தில் டெயில் எண்டர்கள் 11*, சோரிபுல் இஸ்லாம் 5* ரன்கள் எடுத்து விளையாடினார்கள். அப்போது வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் அவர்களை அதிரடியான பவுன்சர்களால் தாக்கினார்கள்.

அதனால் தங்களுடைய பவுலர்கள் காயத்தை சந்தித்து விடக்கூடாது என்பதற்காக வங்கதேசம் 9 விக்கெட்டுகளுடன் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை சிறப்பாக பந்து வீசிய வங்கதேசம் 152 ரன்களுக்கு சுருட்டி வீசியது.

அதிகபட்சமாக அலிக் அதனேஷ் 42 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக தஸ்கின் அகமது 6 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 334 ரன்களை துரத்திய வங்கதேசம் மீண்டும் சுமாராக பேட்டிங் செய்து 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் மெகதி ஹசன் 45 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக கீமர் ரோச் 3, ஜெய்டேன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

சொல்லப்போனால் இரண்டாவது இன்னிங்ஸிலும் தஸ்கின் அஹ்மத் 4*, சோரிபுல் இஸ்லாம் 1* ரன்களுடன் பேட்டிங் செய்தார்கள். அப்போது சோரிபுல் இஸ்லாம் வெஸ்ட் இண்டீசின் அல்சாரி ஜோசப் வீசிய அதிரடியான பந்தால் காயமடைந்தார். அதனால் அவருடைய காயம் மேற்கொண்டு பெரிதாகக்கூடாது என்பதற்காக வங்கதேசம் அவரை ரிட்டயர் அவுட்டாகி அழைத்துக் கொண்டது.

அந்த வகையில் காயம் ஏற்படும் என்ற பயத்தில் வங்கதேச டெயில் எண்டர்கள் இப்போட்டியில் முழுமையாக பேட்டிக் செய்யவில்லை. மொத்தத்தில் 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 1 – 0* (2) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments