Ticker

6/recent/ticker-posts

Ad Code



காசாவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ845… ஒருவேளைதான் உணவு… கதறும் மக்கள்!


இஸ்ரேல் காசா போரில் பெரிதளவு பாதிக்கப்படும் மக்கள் தற்போது ஒரு நாளுக்கு ஒருவேளைதான் உணவு அருந்துகிறார்கள். மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் அதிகரித்துவிட்டதால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

இஸ்ரேல் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பையும் குறிவைத்து தாக்கி வருகிறது. இதனால் போர் விரிவடைந்தே வருகிறது. இந்த இரு அமைப்புகளையும் முற்றிலுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் கூறிவிட்டது. இதனால் போர் மிகவும் பயங்கரமாக நடந்து வருகிறது. 

இந்தப் போரில் மிகவும் பாதிக்கப்படுவது பொது மக்களே. ஏனெனில், சுகாதாரம் இல்லாமல் பல நோய்கள் மக்களை தாக்குகின்றன. இது போதாது என்று பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. போரினால் பல உயிர்கள் பலியாகும் நிலையில், பஞ்சம் மற்றும் நோயினால் அதைவிட அதிகமான உயிர்கள் போகின்றன. இதனால் விலைவாசிகள் உயர்ந்துள்ளன.

ஒரு கிலோ வெங்காயம் ரூ.845. ஒரு ரொட்டித் துண்டு ரூ.73. அதுவும் நிச்சயமில்லை. நாளொன்றுக்கு ஒரு வேளை தான் சாப்பிட முடிகிறது. அதுவும் எந்த வேளை அந்த உணவு கிடைக்கும் என்பது நிச்சயமில்லை என்று காசாவில் மக்கள் கதறுகின்றனர். 

தெற்கு காசாவில் உள்ள நிவாரண முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உணவு அளித்தாலும், அதை பெற பலர் காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களுக்குமே ஒருநாளைக்கு ஒரு வேளை உணவுதான் கிடைக்கின்றன.

அத்தியாவசிய பொருட்கள் அனைத்துமே விலை உயர்ந்துள்ளது. ஒரு ரொட்டி பாக்கெட்டின் விலை (15 ரொட்டி துண்டுகள் கொண்டது) ரூ. 1100. சராசரியாக ஒரு ரொட்டி துண்டு மட்டும் 73 ரூபாய். ஒரு கிலோ வெங்காயம் ரூ. 845 ஆகவும், சமையல் எண்ணெய் உச்சத்தில் ரூ. 1,267.

தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக பெற்றோர்கள் தங்கள் உணவுகளை தவிர்க்கின்றனர். மேலும் போர் காரணமாக சாதாரண மக்களின் வருவாய் இல்லாத நிலையில், இந்த கடுமையான விலைவாசி உயர்வு மக்கள் வாழவே முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளது. பணக்காரர்களும் இன்னும் எத்தனை நாட்கள் இந்த விலைவாசிக்கு நடுவில் வாழ்வார்கள் என்பது தெரியவில்லை. இப்படியே போனால், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த காசா மக்களையும் காவு வாங்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

kalkionline



 Ai SONGS

 



Post a Comment

0 Comments