Ticker

6/recent/ticker-posts

3 விக்கெட்ஸ்.. தமிழக வீரர் சக்கரவர்த்தியின் போராட்டத்தை வீண்.. இந்தியாவின் சாதனை நடையை உடைத்த தெ.ஆ

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்திய 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி நவம்பர் 10ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தென்னாப்பிரிக்காவில் உள்ள கிபர்ஹா நடைபெற்றது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கடந்த போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சன் டக் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே அபிஷேக் ஷர்மா 4 ரன்களில் அவுட்டான அடுத்ததாக வந்த கேப்டன் சூரியகுமாரும் 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அதனால் 15-3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்திய அணிக்கு நிதானமாக விளையாடிய திலக் வர்மா 20 ரன்களிலும் அதிரடியாக விளையாட முயற்சித்த அக்சர் பட்டேல் 27 ரன்களிலும் அவுட்டானார்கள். இறுதியில் ரிங்கு சிங் 9 ரன்களில் அவுட்டானாலும் ஹர்திக் பாண்டியா நிதானமாக விளையாடி 39* (45) ரன்கள் எடுத்தார். அதனால் 20 ஓவரில் இந்தியா போராடி 124-6 ரன்கள் குவித்தது.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு கேப்டன் மார்க்ரம், கோட்சி, யான்சென், பீட்டர், ஆண்டிலே தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் 125 ரன்களை துரத்திய தென்னாபிரிக்காவுக்கு ரிக்கள்டன் 13 ரன்களில் அர்ஷ்தீப் வேகத்தில் அவுட்டானார். மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த ஹென்றிரிக்சை 24 ரன்களில் போல்டாக்கிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அடுத்து வந்த கேப்டன் மார்க்கமையும் 3 ரன்களில் பெவிலியன் அனுப்பினார்.

அதோடு நிற்காத அவர் அடுத்ததாக வந்த மார்கோ யான்செனை 7 ரன்களில் அவுட்டாக்கி காட்டடி பேட்ஸ்மேன் ஹென்றிச் க்ளாஸெனை 2 ரன்களில் அவுட்டாக்கி டேவிட் மில்லரையும் டக் அவுட்டாக்கினார். அதனால் 66-6 என தென் ஆப்பிரிக்காதடுமாறியதால் வெற்றி இந்தியாவின் பக்கம் வந்தது. அடுத்ததாக வந்த ஆண்டிலேவும் 7 ரன்களில் பிஸ்னோய் சுழலில் அவுட்டானார்.

அதனால் கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4வது இடத்தில் தொடர்ந்து நங்கூரமாக விளையாடி வந்த ட்ரிஷன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடினார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஜெரால்டு கோட்சியும் வெளுத்து வாங்கினார். இந்த ஜோடி ஆவேஷ் கான் – அர்ஷ்தீப் வீசிய 17, 18, 19 ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.

அதனால் 19 ஓவரிலேயே 128-7 ரன்கள் எடுத்த தென்னாபிரிக்கா 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 1* (4) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. அந்த அணிக்கு ஸ்டப்ஸ் 47*, கோட்சி 19* (9) ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றியை பறித்தார்கள். அதனால் 2024 டி20 உலகக் கோப்பை முதல் கடைசியாக விளையாடிய 11 போட்டிகளில் தொடர்ந்து வென்று வந்த இந்தியாவின் 2வது அதிகபட்ச தொடர் வெற்றிகள் சாதனை முடிவுக்கு வந்தது.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments