பாவகை
(நேரிசைக் குளக வெண்பா)
கலையில் மிகுந்து கனிகள் நிறைந்த
நிலையில் உயர்ந்த நிலமே--
அலைந்தே
உழைக்கும்"குறிஞ்சி" உறுதியில் நிற்க
அழைக்குமே பேறுகள் ஆர்த்து,
வரையறை கண்டு வழக்குகள் வென்றார்
உரைகளில் தேர்ந்தார் உயர்வு--
தரையினில்
வாழும் வகையை வடித்தார்"குறிஞ்சியில்"
ஏழு சுரமாய் இனிது,
வாழ்ந்து பழகிட வைத்திடும் வையத்தை
தாழ்விலாத் தன்மை தளிர்க்க--
ஏழ்பிறப்பும்
தண்மதி போலே தகைமையில் முந்திடும்
விண்ணாம்"குறிஞ்சியே" வெற்பு,
உயர்ந்திடும் பண்பில் ஒழுகுதல் மேன்மை
அயலவர் கண்படும் ஆற்றல்--
தயங்காது
தொண்டுகள் செய்து தொடரும்"குறிஞ்சியே"
உண்டு நிலத்தில் உயர்ந்து:
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments