மாஸ்கோ: நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய அமெரிக்க ஏவுகணைகளைப் பயன்படுத்திக் கொள்ள உக்ரைனுக்கு பைடன் நிர்வாகம் அனுமதி வழங்கியதையடுத்து, ஆறு ஏவுகணைகளை வீசி உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவின் ப்ரையான்ஸ்க் பகுதியில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ATACMS ரக ஏவுகணை வீசி உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு ஏவுகணைகளையும் ரஷ்ய ராணுவம் வீழ்த்தியதாகவும், வானில் வெடித்துச் சிதறிய ஏவுகணைகள் குறிப்பிடப்படாத ராணுவ முகாம்கள் அருகே விழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
ப்ரையான்ஸ்க் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்தாலும் எந்தவித ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. குறிவைக்கப்பட்ட பகுதில் சில வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளைப் பயன்படுத்திக் கொள்ள உக்ரைனுக்கு பைடன் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியானது. பைடனின் அமெரிக்க அதிபர் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அவர் உக்ரைனுக்கு காட்டியுள்ள இந்தப் பச்சைக் கொடி ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் உலகளவில் அச்சத்தைக் கடத்தியுள்ளது.
ஒருவேளை உக்ரைன் அமெரிக்க ஏவுகணைகளைப் பயன்படுத்தினால் அது ரஷ்யா எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தும். அப்படி ஏவப்பட்டால், 1000 நாட்களுக்கும் மேலாக நடக்கும் இந்தப் போரில் முதன்முறையாக எல்லைப் பகுதிகளைக் கடந்து ரஷ்ய பிராந்தியங்களுக்குள் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக அமையும். இதன் மூலம் போர் மேலும் தீவிரமடையும்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ரஷ்யாவை ஆவேசப்படுத்தியுள்ளது. எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியிருக்கிறது அமெரிக்கா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. பலதரப்பு நிபுணர்கள் தெரிவித்துவந்த மூன்றாம் உலகப் போர் அச்சம் உண்மையாக வாய்ப்புகள் உருவாகும் என்று கவலை தெரிவிக்கப்படுகிறது.
hindutamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments