Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -72


குறள் 1317
வழுத்தினாள் தும்மினேன் ஆக 
அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று.

நான் தும்மினேன். 
என் உயிர்த்தோழி 
ஆறாவது படிக்கும் 
கவிதா 
வழக்கம்போல் வாழ்க வாழ்க 
என்றே வாழ்த்தினாள்! 
மறுநொடியே 
பாமதி! 
எந்தத் தோழி உன்னை 
நினைத்தாள்!? 
தும்மினாய்? 
எனக்கேட்டாள்! 
என்னைவிட ஒருதோழியா? 
யாரது? சொல்சொல்! 
சொல்லவில்லை உன்னோடு
பேசவேமாட்டேன்! 
சினங்கொண்டு 
எழுந்துபோய்விட்டாள்!

குறள் 1318
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் 
எம்மை மறைத்திரோ என்று.

வம்பு எதற்கென்று 
இந்தமுறை 
வந்ததும்மலை 
அடக்கினேன்! 
நமுட்டுச் சிரிப்புச் 
சிரித்தாள் கவிதா! 
பாமதி! என்றாள்! 
பார்த்தேன் கலக்கத்துடன்! 
ஓ! உனக்கு இன்னொரு 
உயிர்த்தோழி இருக்கின்றாளோ! 
அவள் நினைத்ததும் தும்முகின்றாயோ! 
கண்டுபிடித்துவிடுவேன் என்று 
அடக்குகின்றாயோ! 
என்று அழுதேவிட்டாள்! 
இப்படியும் நட்பா?

குறள் 1319
தன்னை உணர்த்தினும் காயும் 
பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று. 

கலையரசி! 
இப்பநாம 
ஆறாவது வந்துட்டோம்!
நாலாவதுல இருந்து 
ஒண்ணா படிச்சுக்கிட்டுவர்றோம்! 
உன்னோட சண்டபோடற 
மணப்போக்கை மாத்திக்கோ! 
நானும் உன்னோட 
ராசியாயிட்டேன்! விடு! 
மகிழ்ச்சியா இருப்போம்சரியா? 
ஓகோ! இப்படித்தான் 
உன்னோட நட்புத்தோழிகளிடம்
நடந்துக்குறுவபோல இருக்கு! 
சொல்லுதமிழாசி! என்றே 
சினந்தாள்.

(தொடரும்)





 Ai SONGS

 



Post a Comment

0 Comments