Ticker

6/recent/ticker-posts

7 வயது சிறுவனுக்கு மென்பொருள் நிறுவனத்தில் வேலை


ரஷ்யாவில் ஒரு மென்பொருள் நிறுவனம் ஏழு வயதுச் சிறுவனுக்கு வேலை வழங்கியுள்ளது.

செர்கெய் (Sergey) என்ற அந்தச் சிறுவன் சம்பளம் பெறும் வயதை எட்டியவுடன் தனது நிர்வாகக் குழுவில் சேர்ந்துவிடலாம் என்று Pro32 எனும் அந்த நிறுவனம் கூறியது.

செர்கெய் ஐந்து வயதிலிருந்து மென்பொருள் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ரஷ்யச் சட்டத்தின் கீழ் ஒருவர் 14 வயதான பின்பு தான் சம்பளம் பெறும் வேலையில் சேர முடியும்.

அது வரை செர்கெயுடன் வேறு வழிகளில் இணைந்து செயல்படுவது குறித்து அவனது பெற்றோருடன் பேசியதாக Pro32 நிறுவனத்தின் தலைமை நிர்வாகி BBCயிடம் சொன்னார்.

செர்கெயிடம் ஆச்சரியப்படுத்தும் வகையில் மென்பொருள் திறனும் அதைக் கற்றுக்கொடுக்கும் திறனும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சிறுவனுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.

nambikkai


 Ai SONGS

 



Post a Comment

0 Comments