Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அதிகம் தயாரிக்க புதின் உத்தரவு


உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யா தனது புதிய ஓரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் போரில் சோதிக்கும். அந்த ஏவுகணைகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.

அமெரிக்க பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பிரிட்டிஷ் க்ரூஸ் ஏவுகணைகளை ரஷியாவைத் தாக்க உக்ரைன் பயன்படுத்தி இருக்கிறது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று புதின் தெரிவித்தார். 

ரஷியாவிற்கு விடுக்கப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் நிலைமை மற்றும் தன்மையைப் பொறுத்து, போர் நிலைமைகள் உட்பட, இந்தச் சோதனைகளை நாங்கள் தொடருவோம்.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பெருமளவில் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சோதனை செய்யப்பட்ட ஆயுத அமைப்பு ரஷியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மற்றொரு உண்மையுள்ள உத்தரவாதமாகும்.

உலகில் வேறு எந்த நாடுகளிலும் இதுபோன்ற ஏவுகணை தொழில்நுட்பம் தற்போது இல்லை.

ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளதால் வரும் நாட்களில் உக்ரைன் மீதான தாக்குதல் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments