இதுநாள்வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுபவித்து வந்த சில சலுகைகள் புதிய நாடாளுமன்றில் குறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
25, 26, 27 ஆகிய திகதிகளில் அனைத்து எம்.பி.க்களுக்கான பயிலரங்கம் நடைபெற உள்ளது. இந்த செயலமர்வில் புதிய எம்.பி.க்களின் சிறப்புரிமைகள் குறித்து நாடாளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவிக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கைத்துப்பாக்கி கிடையாது: காவல்துறை பாதுகாப்பு நீக்கம்
இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த வசதியை நீக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தவிர ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்ததாகவும் அதுவும் நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரியில்லா வாகன அனுமதிப்பத்திரமும் இரத்து
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த வரியில்லா வாகன அனுமதிப்பத்திரமும் நீக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ibctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments