தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது. கடும் விமர்சனம் எழுந்த நிலையில், தனது கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிக்கை வெளியிட்டார்.
எனினும் திருநகர், ஆண்டிபட்டி உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் கஸ்தூரி மீது புகார்கள் அளிக்கப்பட்டன.
அதன்பேரில், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் கஸ்தூரி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்குகளில் முன்ஜாமின் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடிகை கஸ்தூரி மனுத்தாக்கல் செய்துள்ளார். வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் தி.க., தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்பினர் தனது பேச்சை திரித்து பரப்பி விட்டதாக மனுவில் குறிப்பிட்டார்.
தான் பொது மன்னிப்பு கோரி உள்ளதாகவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன் என்பதால், முன்ஜாமின் வழங்க கேட்டுக்கொண்டார். ஆனால், கஸ்தூரியின் மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே, இதே விவகாரத்தில் சென்னையில் கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில், கஸ்தூரி தலைமறைவானார். அவரை பிடிக்க காவல்துறை தனிப்படை நியமித்திருந்தது.
தனிப்படை அவரை தீவிரமாக தேடிவந்த நிலையில், தற்போது கஸ்தூரி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர் என்று சொல்லப்படுகிறது.
தயாரிப்பாளர் உதவியுடன் ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த இரண்டு நாட்களாக தனிப்படை போலீஸார் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் தான் தற்போது ஹைதராபாத்தில் கஸ்தூரி கைது செய்யப்பட்டுள்ளார்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments