Advertisement

Responsive Advertisement

ஹரீஸ் ஏன் ஒதுக்கப்பட்டார் : தேசிய பட்டியலிலும் ஏமாற்றப்படுவாரா ?


20 வருடங்களாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் அங்கம் வகித்து பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ஹரீஸ்  அவர்கள் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில், கட்சிக்குள்ளே இருக்கும் பல அங்கத்தவர்களால் குழி பறிக்கப்பட்டு திட்டமிட்டு ஒதுக்கப்பட்டார்.

இதனால் கல்முனை மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் முறுகல்களை ஏற்படுத்தியதோடு ஹரீஸுக்கு சார்பாக பல பாரிய கூட்டங்களையும் நடத்தி தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இது பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் தலைவர், தாம் ஹரீஸ் அவர்களை உட்படுத்த முயற்சித்ததாகவும் உச்ச பீடம் அதற்கான அனுமதி வழங்கவில்லை என்றும், இது உச்ச பீடத்தின் முடிவு
முடிவு எனவும் தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக இன்னும் சிலர் கருத்து தெரிவிக்கும் போது, ஹரீஸ் ஒரு நியாயமான, உண்மையான அரசியல்வாதி என்றும், 
20 வது  அரசியல் யாப்பு திருத்தங்களின் போது பசில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்கவும, மக்களை ஏமாற்றும் வகையில் தலைவர் ஆதரவாக வாக்களிக்கவும் முடிவுகள் எடுக்கப்பட்டதை வெளிப்படையாக வெளியிட்டதை தொடர்ந்து, இவர் மீது சந்தர்ப்பம் பார்த்தகருந்ததாகவும் தக்க சந்தர்ப்பத்தில் இவர் தூக்கி எறியப்பட்டார் எனவும் தெரிவித்தனர்.

என்றாலும் தற்போது தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரீஸ் அவர்களை  நியமிப்பதாக சொல்லப்பட்டு சமாதானப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிஸாம் காரியப்பர் அவர்கள் தேசியப் பட்டியலை எதிர்பார்த்து இருப்பதினால் இதுவும் சாத்தியக் குறைவாகவே உள்ளது.  அனைத்து விடயத்தையும் சானக்கியமாக காய் நகர்த்தும் சானக்கியத் தலைவர் ஹரீஸ் விடயத்தையும் சாணக்கியம் காய் நகர்த்தியே விடுவாரா  ?

பேருவளை ஹில்மி




 Ai SONGS